அழகு தாயாக மிளிரும் மியா ஜார்ஜ்... கணவர் மற்றும் குழந்தையுடன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!!

First Published | Sep 9, 2021, 7:03 PM IST

அமரகாவியம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த மியா ஜார்ஜ் - தொழிலதிபர் அஷ்வின் ஃபிலிப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன ஒரே வருடத்தில் குழந்தைக்கும் தாயாகிவிட்ட மியா, தற்போது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

2014-ம் ஆண்டு 'அமர காவியம்' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் மியா ஜார்ஜ். அதனைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை', 'ஒருநாள் கூத்து', 'வெற்றிவேல்', 'ரம்', 'யமன்' ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

படவாய்ப்புகள் குறையவே கடந்த 2020 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான அஷ்வின் ஃபிலிப் என்பவரை, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். 
 

Tap to resize

இவர் கர்ப்பமாக இருந்த தகவல் வெளியே கசியாமல் பாதுகாத்து வந்த மியா ஜார்ஜிக்கு, இந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலை வெளியிட்டார்.
 

சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும், மியா ஜார்ஜ் அவ்வப்போது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 

இந்நிலையில் தன்னுடைய நான்கு மாத கை குழந்தை மற்றும், கணவருடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அம்மா ஆன பிறகு மியா ஜார்ஜ் சற்று எடை கூடி காணப்பட்டாலும், அழகு தேவதையாகவே மிளிர்கிறார். அவருடைய மகனை பற்றி சொல்லவா வேண்டும் அவ்வளவு அழகு.

குடும்பத்தோடு இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக லைக்குகள் எகிறி வருகிறது.

Latest Videos

click me!