பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் மட்டுமே முதல் வாரம் எலிமினேஷன் நடந்தது. அதை தொடர்ந்து வெளியான சீசன்களில் 2 ஆவது வாரத்தில் இருந்தே எலிமினேஷன் பயணத்தை பிக்பாஸ் துவங்கி வைத்தார்.
இந்நிலையில் பிக்போஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் இதே தான் நடக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பு. காரணம், நாமினேஷன் படலம் நடக்கவில்லை. அதே போல் பிக்பாஸ் வீட்டில் ஒரு தலைவரை இந்த வாரம் தேர்வு செய்யாமல், ஒவ்வொரு அணிக்கும் ஒரு தலைவர் என நியமிக்கப்பட்டனர் என்பது நாம் அறிந்ததே.
முதல் வாரம் என்பதால் போட்டியாளர்களுக்கு பெரிதாக எந்த ஒரு பிரச்னையும் நடக்கவில்லை. ஆனால் நேற்று மட்டும் தாமரை செல்வி பேசியதால் நமீதா கடுப்பாகி சில வார்த்தைகளை விட்டதில் அவர் கண்கலங்கி விட்டார். பின்னர் இந்த பிரச்னையும் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் வரும் வாரங்களில் இதே போல் நிகழ்ச்சி செல்லாமல் பரபரப்பான சண்டைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று திடீர் என பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான நமீதா மாரிமுத்து, தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறியுள்ளதாக நேற்று நிகழ்ச்சி துவங்கும் முன் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், நமீதா மாரிமுத்து... திடீர் என கோவத்தில் சில பொருட்களை சேதப்படுத்தியது மட்டும் இன்றி, மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரது மனநிலை, மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு தற்போது அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.