Coolie Aamir Khan : நடிகர் ஆமிர் கான் கூலி படத்தில் நடித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு என கூறியதாக செய்தி ஒன்று இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது. அதன்பின்னணியை பார்க்கலாம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் கூலி. அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருந்த அப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், ரச்சிதா ராம், உபேந்திரா, மாறன், நாகர்ஜுனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதுதவிர பாலிவுட் நடிகர் ஆமிர்கானும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அவர் நடித்த தாஹா கதாபாத்திரம் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. அதுமட்டுமின்றி அவரின் ரோல் கடுமையாக ட்ரோலும் செய்யப்பட்டது.
24
வைரலாகும் ஆமிர் கானின் பேட்டி
இந்த நிலையில், கூலி படத்தில் நடித்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என ஆமிர்கான் கூறியதாக இணையத்தில் செய்தி ஒன்று உலா வந்தது. தான் வந்து இரண்டு டயலாக் பேசிவிட்டு செல்வது போல் தன்னுடைய காட்சி மிக மோசமாக எழுதப்பட்டிருந்ததாகவும், தான் கதையில் தலையிடாததால் அது இறுதியாக எப்படி வரும் என்று கூட தெரியாமல் நடித்ததாகவும், ரஜினி சாருக்காக மட்டுமே அந்த கேமியோ ரோலை செய்தேன். அது ஒர்க் ஆகவில்லை. இனி இது போன்ற கேரக்டர்களில் நடிக்கும் போது கவனமாக இருப்பேன் என ஆமிர்கான் சொன்னதாக குறிப்பிட்டு ஒரு செய்தித்தாள் போட்டோ வைரலாகி வந்தது.
34
போலி செய்தி
ஆமிர் கான் இப்படி சொன்னாரா என பலரும் ஷாக் ஆகிப்போயினர். ஆனால் உண்மையில், அது ஒரு போலி செய்தி. ஆமிர் கான் மீது அவதூறு பரப்பும் விதமாக அந்த செய்தியை இணையத்தில் பரப்பி வருவது தெரியவந்துள்ளது. ஆமிர் கான் எந்த ஒரு பேட்டியிலும் அதை சொல்லவில்லை. ஆமிர் கானுக்கு ரஜினிகாந்த் உடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதனால் தான் லோகேஷ் கனகராஜ் கேட்டதும் உடனே ஓகே சொல்லி நடித்திருக்கிறார். வழக்கமாக ஆமிர் கான் கதை கேட்காமல் எந்த படத்திலும் நடிக்க மாட்டார். அவர் முதன்முதலில் கதை கேட்காமல் நடித்த திரைப்படம் கூலி தான்.
இதில் மற்றுமொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், கூலி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க நடிகர் ஆமிர் கான் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. ஆமிர் கான் கேமியோ ரோலில் நடித்ததால் தான் கூலி படம் வட இந்தியாவில் ஓரளவு வசூலை வாரிக் குவித்திருந்தது. அவரது கேமியோ ஒர்க் அவுட் ஆகாமல் போனாலும் இப்படத்தின் மூலம் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆமிர் கானின் நீண்ட நாள் ஆசை நிறைவேறி இருக்கிறது. இதனால் அவர் ஹாப்பியாக தான் இருக்கிறார். ஆனால் அவர் மீது அதிருப்தியில் இருக்கும் சிலர் தான் இதுபோன்ற போலி செய்தியை பரப்பி இருக்கக்கூடும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.