விஜயைவிட நான் பெரிய ஆளு.. எனக்கு திரிஷா மாதிரி மனைவி வேணும்..! ‘தர்பீஸ்' திவாகர் அடாவடி..!

Published : Feb 09, 2026, 11:15 AM IST

விஜய் சேதுபதி, விஜயகாந்த், சரத்குமார் இவர்கள் எல்லாரும் பாடியான ஆட்கள். இவர்களெல்லாம் தெற்கில் இருந்து வந்தவர்கள் தான். அவர்களைப் போல மாஸ் ஹீரோவாக வந்து மக்கள் மனசுல இடம் பிடிக்க வேண்டும்.

PREV
14
அவமானங்கள், கேலி, கிண்டல்கள் தாண்டி

‘‘நடிப்பு என்றால் சிவாஜிக்கு அடுத்தபடியாக கமல்ஹாசன். அதற்கடுத்து நான் தான். ஹீரோவாக அனைத்து திறமைகளும் இருக்கிறது. ஆனால், என்னை பார்த்து பயந்து, சூழ்ச்சிகள் செய்கிறார்கள்’’ என பிக்பாஸ் பிரபலம் திவாகர் வேதனைப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர், "பல அவமானங்கள், கேலி, கிண்டல்கள் தாண்டி ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எப்போதும் பார்க்காத ஒரு கோணத்தில் ஒரு நடிப்பு அரக்கனை வெள்ளி திரையில் நீங்கள் விரைவில் காண்பீர்கள். எனக்கு வரவிருக்கும் மனைவி திரிஷா, சமந்தா போல இருந்தால் நன்றாக இருக்கும்.

நடிப்பு என்றால் சிவாஜிக்கு அடுத்தபடியாக கமல்ஹாசன். அதற்கடுத்து நான் தான். ஹீரோவாக அனைத்து திறமைகளும் இருக்கிறது. ஆனால், என்னை பார்த்து பயந்து, சூழ்ச்சிகள் செய்கிறார்கள். விஜய், சிவகார்த்திகேயனுக்கு இணையாக எனக்கும் ரசிகர்கள் உள்ளனர். மதுரையில் இருந்து கேப்டன் விஜயகாந்துக்கு அடுத்து எந்த ஒரு நடிகரும் பெரிதாக தமிழ் திரையுலகுக்கு வரவில்லை. அந்த இடத்தை நிரப்ப நான் வந்துள்ளேன். அவரை போல அடுத்த நடிகர் சங்க தலைவராகவும் ஆவேன்.

24
விஜயகாந்த்துக்கு அப்புறம் நான்..

மதுரையில் இருந்து விஜயகாந்த் சென்னையில் வந்து, சென்னை மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலேயே மக்கள் மனசில் ஆழமாக பதிந்திருந்தார். அவர் மாதிரி மக்களுக்கு உணவு சாப்பாடு போட முடியாது. சூட்டிங்கில எல்லாருக்கும் சமமான சாப்பாடு போட்டார். அவருக்கு அன்னைக்கு மட்டன் சுக்கா என்றால் எல்லோருக்கும் மட்டன் சுக்கா. மட்டன் பிரியாணி என்றால் வேலை பாக்கிற டெக்னீசியன்ஸ் எல்லாருக்கும் சமமாக சாப்பாடு இருக்கணும். அதனாலதான் நடிகர் சங்கத்தில் தொடர்ந்து தலைவராக இருந்தார், அரசியலுக்கு வந்தவர். ஆகையால் விஜயகாந்த்துக்கு அப்புறம் மதுரையில் இருந்து ஒரு பெரிய என்ட்ரி இல்லை.

அது காலியாக இருக்கிறது. நடிகர் விஜயகாந்த்துக்கு அப்புறம் மதுரையில் இருந்து ஒரு என்ட்ரி இல்லை. அந்த மதுரை மீனாட்சி அம்மன் அருளால் அந்த விஜயகாந்த் விட்ட இடத்தை நிரப்புவதற்காக வந்திருக்கிறேன். விஜயகாந்த் 50 வருஷத்துக்கு முன்னாடி பிறகு மதுரையிலிருந்து பெரிய எண்ட்ரி இப்போது. விஜயகாந்த், வடிவேலுவாக இருக்கட்டும், விஜயகாந்தாக இருக்கட்டும், அவர்களெல்லாம் வந்து இப்போது ரொம்ப வருஷம் ஆச்சு. இன்னும் ஒரு ஃப்ரஸ்பி என்ட்ரி கிடைக்கவில்லை. இயல், இசை, நாடகம் இதையெல்லாம் ஊக்குவித்து தமிழை வளர்த்த இடம் மதுரை. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் எல்லாம் பார்த்த இடம் மதுரை. அப்பேற்பட்ட மதுரை மண்டலத்தில் இருந்து வந்தவர்தான் விஜயகாந்த்.

34
நடிகர் சங்க தலைவர் கூட ஆகலாம்... யார்கண்டா?

வருகிறவங்களுக்கு உணவளிக்கனும், சமபந்தி என அந்த தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றிய ஒரு மனிதர். சென்னையில் வந்து தமிழ் கலாச்சாரத்தை கடைபிடித்த நல்ல ஒரு மனிதர். ஆக்சுவலா அந்த விஜயகாந்திடம் ரசிகர்களுக்கு உணவளிக்கிற நல்ல விஷயம் இருக்கிறது இல்லையா? அதே மாதிரி நானும் விஜயகாந்த் மாதிரி சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிப்பேன். சொல்ல முடியாது நாளைக்கு நம்மளே நடிகர் சங்க தலைவர் கூட ஆகலாம். யார்கண்டா? மதுரையில் இருந்து வந்தவர் தானே நடிகர் சங்கத்துக்கு தலைவரா இருந்தார். அரசியல் வேணாம். பொதுமக்கள்கிட்ட விளம்பரத்தை திணிக்க கூடாது.

44
மாஸ் ஹீரோவா மக்கள் மனசுல இடம் பிடிக்கணும்

அனைவருக்கும் நானும் பிற்காலத்தில் நல்லது செய்வேன். இப்போதைக்கு என்னால் முடிந்த வரை பிசியோதெரபி மருத்துவம் செய்து வருகிறேன். சின்ன சின்ன உதவிகள் பண்ணிக்கிட்டு இருக்கோம். நாளைக்கு விஜயகாந்த் மாதிரி ஒரு பெரிய ஹீரோவா வந்தோம்னா மக்களுக்கு நிறைய செய்வேன். உணவளிக்கிற திட்டம் என்பது நான் உறுதிமொழி அளிக்கிறேன் கண்டிப்பாக அடுத்த விஜயகாந்த் நான் தான். சரத்குமார், விஜயகாந்த் மாதிரி ஒரு ஹீரோ பாடி லாங்குவேஜ் எனக்கு இருக்கு. 

அந்த மாதிரி நிறைய பேர் சொல்லுவாங்க. விஜய் சேதுபதி, விஜயகாந்த், சரத்குமார் இவர்கள் எல்லாரும் பாடியான ஆட்கள். இவர்களெல்லாம் தெற்கில் இருந்து வந்தவர்கள் தான். அவர்களைப் போல மாஸ் ஹீரோவாக வந்து மக்கள் மனசுல இடம் பிடிக்க வேண்டும். நான் இதை கம்பேர் பண்ணி சொல்லவில்லை. நிறைய பேர் சொல்கிறார்கள். மக்களின் கருத்து. விஜயகாந்த் மாதிரி ஒரு பெரிய ஹீரோவாக வலம் வந்து, மக்களுக்காக உதவி செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை’’ என்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories