இவரது இசைக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் ராஜ்ஜியம் நடத்தி வரும் இளையராஜா, தமிழில், கீதாஞ்சலி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது, கொக்கரக்கோ, ராஜாதி ராஜா, சிங்காரவேலன் உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.