ராமராஜன் முதல் ரஜினி, மாதவன் வரை... பல ஹிட் பாடல்களைத் தந்த இசைக்குயில் ஆஷா போஸ்லே மறைவு!

Published : Apr 12, 2026, 04:06 PM IST

Iconic Singer Asha Bhosle Passed Away: இந்தியத் திரையிசையின் முடிசூடா அரசியாகத் திகழ்ந்த ஆஷா போஸ்லே காலமானார். ரஜினிகாந்த், ராமராஜன் முதல் மாதவன் வரை பல நடிகர்களின் படங்களுக்கு அவர் பாடிய மறக்க முடியாத ஹிட் பாடல்கள் இசைப் பயணம் குறித்த ஒரு பார்வை

PREV
16
ஆஷா போஸ்லே மறைவு (Asha Bhosle Death News)

இந்தியத் திரையிசையின் முடிசூடா அரசியாகத் திகழ்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (93) காலமானார். இந்த செய்தி ஒட்டுமொத்த இசை உலகையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இன்று (ஏப்ரல் 12) அவரது உயிர் பிரிந்தது.

26
பாடகி ஆஷா போஸ்லே (Singer Asha Bhosle)

12 ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்த ஆஷா போஸ்லேவின் மறைவு, இந்தியக் கலைத்துறையில் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நாளை மாலை 4 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

36
தமிழ் சினிமா பாடல்கள் (Asha Bhosle Tamil Hits)

ஆஷா போஸ்லே பாலிவுட்டில் கோலோச்சினாலும், தமிழ் திரையிசையிலும் மறக்க முடியாத பல காவியப் பாடல்களைத் தந்துள்ளார். இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் இசையில் அவர் பாடிய பாடல்கள் இன்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளன.\

46
செந்தூரப்பூவே பாடல் (Shenbagame Shenbagame Song)

குறிப்பாக 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தில் அவர் பாடிய 'செண்பகமே செண்பகமே', 'அலைபாயுதே' படத்தில் வரும் துள்ளல் நிறைந்த 'செப்டம்பர் மாதம்', 'சந்திரமுகி' படத்தின் மென்மையான 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்' ஆகிய பாடல்கள் அவரது குரல் வளத்திற்குச் சான்றுகளாகும்.

56
இசை ஜாம்பவான் மறைவு (Legendary Singer Passes Away)

மேலும் 'மீரா', 'இருவர்', 'ஹேராம்' போன்ற படங்களில் அவர் பாடிய நுணுக்கமான பாடல்கள் தமிழர்களின் இசை ரசனையோடு ஒன்றிப்போனவை. பத்ம விபூஷண் மற்றும் தாதாசாகேப் பால்கே விருதுகளை வென்ற இந்த இசைச் சகாப்தத்தின் குரல், அவர் மறைந்தாலும் காலத்திற்கும் அழியாமல் காற்றில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

66
பாடகி ஆஷா போஸ்லே

பாடகி ஆஷா போஸ்லே 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி பிறந்தார். அவருக்கு வயது 92. இசைத்துறையில் இதுவரை 20 மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார். 10 வயதில் பாடல் பட ஆரம்பித்த அவர் 92 வயது வரை பாடிக்கொண்டே தான் இருந்தார். அவர், கச்சேரி, கஜல், பாப், நாட்டுப்புறம் போன்ற பலவற்றிலும் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories