இந்தியாவில் எந்த ஒரு ஹீரோவும் செய்யாத சாதனை... முதல் ஆளாக தட்டிதூக்கிய ‘டியூட்’ பிரதீப் ரங்கநாதன்..!

Published : Oct 24, 2025, 08:48 AM IST

லவ் டுடே, டிராகன் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன், மூன்றாவதாக நடித்துள்ள டியூட் திரைப்படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளார்.

PREV
14
Pradeep Ranganathan Movie Record

பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜு கூட்டணியில் தீபாவளிக்கு வெளியான 'டியூட்' திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது. 6 நாட்களில் இந்த படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், உலகெங்கிலும் வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் சரத்குமார், டிராவிட் செல்வம், ரோகிணி, கருடா ராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். நல்ல மெசேஜ் உடன் கூடிய ஒரு ரொமாண்டிக் - காமெடி திரைப்படமாக வெளியான டியூட் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

24
டியூட் 100 கோடி வசூல்

டியூட் திரைப்படம் 100 கோடி வசூலித்துள்ளதன் மூலம் அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அதன்படி இதுவரை அவர் ஹீரோவாக நடித்த மூன்று படங்களுமே 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளன. அவர் முதன்முதலில் லவ் டுடே படம் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் அள்ளியது. அறிமுக படத்திலேயே 100 கோடி வசூல் அள்ளிய முதல் இந்திய நடிகர் என்கிற சாதனையை அப்போது படைத்திருந்தார் பிரதீப் ரங்கநாதன்.

34
பிரதீப்பின் அரிய சாதனை

இதையடுத்து அவர் நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டிராகன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட்டதோடு, 150 கோடி வசூலை வாரிக் குவித்தது. பிரதீப் ரங்கநாதனின் கெரியரில் அதிக வசூல் அள்ளிய திரைப்படம் டிராகன் தான். அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ள படம் தான் டியூட். இப்படம் 100 கோடி வசூல் செய்துள்ளதன் மூலம் இதன் மூலம், முதல் மூன்று படங்களில் 100 கோடி வசூல் அள்ளிய முதல் ஹீரோ என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார் பிரதீப்.

44
அதிவேகமாக 100 கோடி வசூல் அள்ளிய டியூட்

இதில் மற்றுமொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், பிரதீப்பின் முதல் 100 கோடி படமான லவ் டுடே, ரிலீஸ் ஆன 35 நாட்களில் 100 கோடி வசூலை எட்டியது. இதையடுத்து அவர் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் செஞ்சுரி அடித்த டிராகன், 10 நாட்களில் 100 கோடி வசூலை எட்டியது. ஆனால் இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக வந்த பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம், 6 நாட்களிலேயே 100 கோடி வசூல் அள்ளி சாதனை படைத்துள்ளது. பிரதீப்பின் கெரியரில் அதிவேகமாக 100 கோடி வசூல் செய்த படம் டியூட் தான். இப்படம் அவரின் முந்தையை படமான டிராகன் வசூலை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories