Published : Jan 10, 2026, 04:51 PM ISTUpdated : Jan 10, 2026, 05:37 PM IST
பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருந்த விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் திடீரென விலகியதால், அப்படத்திற்கு பதிலாக நான்கு படங்கள் போட்டிபோட்டு களத்தில் குதித்திருக்கின்றன.
தமிழர் பண்டிகையான பொங்கலுக்கு புதுப்படங்கள் போட்டிபோட்டு வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்த ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. மற்றொரு படமான பராசக்தி இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. ஜனநாயகன் விலகலுக்கு பின்னர் அடுத்தடுத்து நான்கு திரைப்படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்கி உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
26
வா வாத்தியார்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் வா வாத்தியார். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இப்படத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் தான் சென்சார் சான்றிதழ் கிடைத்தது. தணிக்கை சான்றிதழ் கிடைத்த கையோடு பொங்கல் வெளியீட்டை உறுதி செய்தது இப்படம். வருகிற ஜனவரி 14ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
36
திரெளபதி 2
ஜனநாயகன் விலகலுக்கு பின்னர் பொங்கல் ரிலீஸை உறுதிசெய்த மற்றொரு திரைப்படம் திரெளபதி 2. இப்படத்தின் முதல் பாகம் சர்ப்ரைஸ் ஹிட் அடித்தது. அதனால் திரெளபதி 2 படம் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அப்படத்தை மோகன் ஜி இயக்கி உள்ளார். இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இப்படமும் ஜனவரி 14ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
சந்தானம் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட திரைப்படம் தான் சர்வர் சுந்தரம். ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இப்படம் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு மேலாக முடங்கிப்போய் கிடக்கிறது. கடந்த ஆண்டு மதகஜராஜா திரைப்படம் 12 வருட காத்திருப்புக்கு பின் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், இந்த ஆண்டு பொங்கல் ரேஸில் சர்வர் சுந்தரம் ரிலீஸ் ஆகி அதே மேஜிக்கை மீண்டும் நிகழ்த்த காத்திருக்கிறது. பொறுத்தது போதும் பொங்கி எழு என குறிப்பிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதனால் இப்படமும் ஜனவரி 14ந் தேதி திரைக்கு வர வாய்ப்பு உள்ளது.
56
ஃபிரீடம்
டூரிஸ்ட் ஃபேமிலி என்கிற மாபெரும் வெற்றிப் படத்துக்கு பின்னர் சசிகுமார் நடிப்பில் திரைக்கு வர இருந்த படம் ஃபிரீடம். கடந்த ஆண்டு ரிலீஸ் தேதியெல்லாம் அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் இதன் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஃபிரீடம் படமும் திரைக்கு வர அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சசிகுமார் உடன் லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
66
தலைவர் தம்பி தலைமையில்
பொங்கல் ரேஸில் குதித்துள்ள மற்றொரு திரைப்படம் தலைவர் தம்பி தலைமையில், இப்படத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார். கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. தற்போது ஜனநாயகன் படம் பொங்கல் ரேஸிலிருந்து விலகி உள்ளதால் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தை ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இப்படத்தை நித்திஷ் சகாதேவ் இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.