அட வாரிசு-ல டபுள் ட்ரீட் இருக்காமே..குஷியில் விஜய் ரசிகர்கள்..

First Published | Jun 26, 2022, 6:26 PM IST

விஜயின் யூத் பட பாடல் ஒன்று  ரீமிக்ஸ் செய்யப்பட்டு வாரிசு படத்தில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் ஜூன் 22 அன்று தனது 48 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு, இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளியுடன் தனது அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்தார். அதற்கு தற்காலிகமாக 'தளபதி 66' என்று பெயரிடப்பட்டது. நடிகரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் படத்தின் தலைப்பு மற்றும் படத்தில் இருந்து விஜய்யின் தோற்றத்தின் மூன்று வெவ்வேறு போஸ்டர்களை வெளியிட்டனர்.

2023 பொங்கல் அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இப்படத்திற்கு 'வரிசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு.. பஞ்சாங்க விவகாரம்..விளக்கமளித்த நடிகர் மாதவன்!

Tap to resize

VARISU

சென்னை , ஐதராபாத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முன்னதாக படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான போட்டோக்கள் வைரலாகின இதையடுத்து சூட்டிங் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டது. படக்குழுவினர் மூன்று போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகளுக்கு.. "சீனு ராமசாமி எனது மகன் போன்று"... மாமனிதனை பார்த்து நெகிழ்ந்த மூத்த இயக்குனர் !

varisu

இந்நிலையில் புதிய தகவலாக விஜயின் ஹிட் படத்திலிருந்த்து பாடல் ஒன்று வாரிசுக்காக ரீமிக்ஸ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. விஜயின் ஹிட் பட லிஸ்டில் உள்ள யூத் பட பாடலான "ஆல்தோட்ட பூபதி நானடா" பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. யசோதா படப்பிடிப்பை முடித்த வரலக்ஷ்மி...சமந்தா அண்ட் டீம் வீடியோவை வெளியிட்டு நெகிழ்ச்சி பதிவு!

Latest Videos

click me!