
பிரபல நடிகர் ராஜ்கிரண் இயக்குனராக அறிமுகமான படம் தான் அரண்மனை கிளி. அவரே இயக்கி நடித்து தயாரித்த இந்த படம் 1993-ம் ஆண்டு வெளியானது. ராஜ்கிரண், காயத்ரி, அஹானா, வடிவேலு, சங்கிலி முருகன், இளவரசி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தின் மூலம் காயத்ரி, அஹானா இருவருமே தமிழில் நடிகையாக அறிமுகமானார்கள்..
இளையராஜா இசையில் உருவான இந்த பாடத்தின் பாடல்கள் அனைத்து பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் அரண்மனை கிளி படத்தின் பாடல்கள் இன்றும் பலரின் பிளேலிஸ்டுகளை ஆக்கிரமித்து எவர்கிரீன் ஹிட் பாடல்களாக மாறி உள்ளது.
குறிப்பாக ராசாவே உன்னை விடா பாடலில் காயத்ரியின் நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றது. செல்லம்மா என்ற கிராமத்து பெண் தாபாத்திரத்தில், தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார். மேலும் ராசாவே உனை விடமாட்டேன், பூங்குயிலே பூங்குயிலே பாடல்களில் தனது கண்ணசைவு, புன்னகை, வெட்கம் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார் காயத்ரி.
1992 ஆம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கிய செம்பருத்தி திரைப்படத்தில் நடிகர்கள் பிரசாந்தா மற்றும் ரோஜாவுடன் அறிமுகமாக காயத்ரி அறிமுகமாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் காயத்ரியால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை, இதை தொடர்ந்து அரண்மனை கிளி படத்திற்கான ஆடிஷனில் அவர் கலந்து கொண்டார். மொத்தம் 300 பேர் கலந்து கொண்ட அந்த ஆடிஷனில் காய்த்ரி, அஹானா இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனராம்.
ஆனால் இந்த படத்திற்கு பிறகு நடிகை காயத்ரிக்கு பெரிதாக பட வாய்ப்புகள் வராததால் சினிமாவில் இருந்தே மாயமானார். திருமணமாகி சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். குடும்பம் பிசினஸ் என கவனம் செலுத்தி வந்த காயத்ரி கடந்த 20219-ம் ஆண்டு முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை சீரியல் மூலம் மீண்டும் பிரபலமாகி உள்ளார்.
இந்த சூழலில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை காயத்ரி, முதலில் அரண்மனை கிளியில் செல்லம்மா பாத்திரத்தை ஏற்றுக்கொள்ள தயங்கியதாகவும், ஆனால் இளையராஜா இசையமைக்கிறார் என்பதை அறிந்ததும் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
அடி பூங்குயிலே என்ற மிகப்பெரிய ஹிட் பாடலின் படப்பிடிப்பைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதையையும் அவர் பகிர்ந்து கொண்டார். பச்சை புல், பனித்துளிகள், மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் கொண்ட சரியான லோகேஷன் வேண்டும் என்பதற்காக அந்த பாடல் பதிவு செய்ய 8 மாதங்கள் ஆனதாக அவர் தெரிவித்தார். இந்த ஏல்லாம் சேர்ந்து வர வேண்டும் என்பதற்காக நீண்ட காலம் காத்திருக்க நேர்ந்ததாகவும் அவர் கூறினார்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பெற்றுத்தந்த அரண்மனை கிளி படத்தையும், பாடல்களையும் தன்னால் என்றென்றும் மறக்க முடியாது என்றும் காயத்ரி தெரிவித்தார்.