'உட்றாதீங்க யப்போ' பாடலின் அடித்து நொறுக்கும் சாதனை..! உற்சாகத்தில் 'கர்ணன்' படக்குழு!

First Published Apr 22, 2021, 1:42 PM IST

குறிப்பாக என்ஜாய் எஞ்சாமி புகழ் தீ குரலில் "உட்றாதீங்க யப்போ'   பாடல் வெளியான சில நிமிடங்களில் இருந்தே சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
undefined
ஏப்ரல் 9ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், ஏப்ரல் 10-ம் தேதி முதல் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பால் வசூல் ரீதியாக எப்படியிருக்குமோ என்று படக்குழுவினருக்கு லேசான பயம் இருந்தது.
undefined
ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளை எல்லாம் கடந்து கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய் வசூல் செய்து தனுஷின் அசுரன் பட வசூலையே கர்ணன் திரைப்படம் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
undefined
கர்ணன் படம் கதைக்காக எந்த அளவிற்கு பேசப்பட்டதோ அதே அளவிற்கு பாடல்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. ‘கண்டா வரச்சொல்லுங்க’, ‘மஞ்சனத்தி’, ‘உட்றாதீங்க யப்போ’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
undefined
அதிலும் குறிப்பாக என்ஜாய் எஞ்சாமி புகழ் தீ குரலில் "உட்றாதீங்க யப்போ' பாடல் வெளியான சில நிமிடங்களில் இருந்தே சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. தற்போது இந்த பாடல் தற்போது யூ-டியூப்பில் 4.4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
undefined
click me!