தனுஷ் vs சிவகார்த்திகேயன்; வசூலில் யார் டாப்பு? கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்?

Published : Mar 13, 2025, 11:29 AM IST

தனுஷுக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் அசுர வளர்ச்சி கண்டுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் இருவரது பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

PREV
15
தனுஷ் vs சிவகார்த்திகேயன்; வசூலில் யார் டாப்பு? கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்?

Dhanush vs Sivakarthikeyan : நடிகர்களின் மார்க்கெட் வேல்யூ அவர்களின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை மையப்படுத்தி தான் உயரும். ஒரு நடிகரால் எவ்வளவு பேரை தியேட்டருக்கு வரவழைக்க முடியுமோ அதை வைத்துதான் அவர்களின் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டே முடிவு பண்ணப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் கொடுக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்வதோடு மட்டுமின்றி அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படத்தோட பட்ஜெட்டும் தானாகவே உயரும். அப்படி தமிழ் சினிமாவில் தற்போது மளமளவென உயர்ந்து வரும் நடிகர் என்றால் சிவகார்த்திகேயன் தான்.

25
Dhanush, Sivakarthikeyan

தமிழ் சினிமாவில் மிகவும் நம்பிக்கையான ஒரு நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது அவருடைய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் எவ்ளோ கலெக்ஷன் பண்ணியிருக்கிறது என்கிற லிஸ்ட்டை சினிட்ராக் என்கிற பெரிய டிராக்கர்ஸ் தளம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் 2019ம் ஆண்டில் இருந்து கடைசியாக அவர் நடித்த அமரன் படம் வரையிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் இடம்பெற்றுள்ளது. அதன்படிகடந்த 6 ஆண்டுகளில் அவர் நடிப்பில் மொத்தம் ஒன்பது படங்கள் வெளிவந்துள்ளன. 

இதையும் படியுங்கள்... லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வந்த அழைப்பு; சர்வதேச அங்கீகாரத்தால் செம குஷியில் அமரன் டீம்!

35
Dhanush vs Sivakarthikeyan

இந்த 9 படங்கள் மூலம் மொத்தமாக ரூ. 885 கோடி வசூல் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதாவது ஆவரேஜா ஒரு படத்துக்கு 98.5 கோடி வசூல் செய்திருக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன விட எக்ஸ்பீரியன்ஸ் அதிகமாக இருக்கும் தனுஷ அவரைவிட பாக்ஸ் ஆபிஸில் பின் தங்கி இருக்கிறார். தனுஷை விட சிவகார்த்திகேயனுக்கு தான் ஆவரேஜ் அதிகமாக இருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. 

45
sivakarthikeyan Beat Dhanush in Box Office

இதே கால கட்டத்தில் தனுஷும் 9 படங்கள் நடித்திருக்கிறார். அந்த படங்கள் மொத்தமாக 664 கோடி கலெக்‌ஷன் பண்ணியிருக்கு. அதன் ஆவரேஜ் பாக்ஸ் ஆபிஸ் ரூ.74 கோடி ஆகும். அதே நேரம் தன்னோட கெரியரில் மிகப் பெரிய வெற்றியை சிவகார்த்திகேயன் அடைஞ்ச சந்தோஷத்தில் இருக்கிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் உலக அளவில் ரூ.335 கோடி கலெக்‌ஷன் பண்ணியிருக்கு. அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மத்ராஸி, சுதா கொங்கரா இயக்கும் மல்டி ஸ்டார் படமான பரசக்தியும் சிவகார்த்திகேயன் கைவசம் உள்ளன.

55
Dhanush Movie Box Office

நடிகர் தனுஷை பொறுத்தவரை அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராயன் தான் அவரது கெரியரில் அதிக வசூல் செய்த படமாகும். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.160 கோடி வசூலித்து இருந்தது. தற்போது தனுஷ் நடிப்பில் இட்லிக்கடை, குபேரா ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் இட்லி கடை படத்தை தனுஷே இயக்கியும் உள்ளார். அதேபோல் குபேரா படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... தனுஷ் - வெற்றிமாறன் இன்றி உருவாகும் ‘வடசென்னை 2’! அப்போ ஹீரோ இவர்தானா?

Read more Photos on
click me!

Recommended Stories