Thiruchitrambalam movie : தனுஷை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லுமா திருச்சிற்றம்பலம்? - லீக்கானது ரிலீஸ் தேதி

Ganesh A   | Asianet News
Published : Mar 18, 2022, 08:46 AM IST

Thiruchitrambalam movie : சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி சமூக வலைதளங்களில் லீக் ஆகி உள்ளது. 

PREV
15
Thiruchitrambalam movie : தனுஷை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லுமா திருச்சிற்றம்பலம்? - லீக்கானது ரிலீஸ் தேதி

அடுத்தடுத்து 2 ஃபிளாப்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜகமே தந்திரம் மற்றும் மாறன் ஆகிய படங்கள் மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்வியை சந்தித்தன. இந்த இரண்டு படங்களுமே நேரடியாக ஓடிடி-யில் வெளியாகின. அடுத்தடுத்து இரண்டு தோல்வி படங்களால், ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தனுஷ்.

25

திருச்சிற்றம்பலம் ரெடி

அதன்படி தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். தற்போது 4-வது முறையாக இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர்.

35

ஷூட்டிங் முடிந்தது

கமர்ஷியல் படமாக தயாராகி உள்ள இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

45

மீண்டும் தனுஷ் - அனிருத் கூட்டணி

இப்படத்தில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் அது அனிருத்தின் இசை தான். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான தங்கமகன் படத்துக்குப் பின்னர் இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த தனுஷும், அனிருத்தும் தற்போது 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

55

லீக்கான ரிலீஸ் தேதி

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி சமூக வலைதளங்களில் லீக் ஆகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 1-ந் தேதி வெளியாக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சுமார் ஓராண்டு இடைவெளிக்கு பின் தனுஷ் நடித்த படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதால ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்...  Ilaiyaraaja : இளையராஜாவின் மறுபக்கம் இதுதான்.. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் போட்ட நெகிழ்ச்சி பதிவு

Read more Photos on
click me!

Recommended Stories