கொரோனாவால் தனுஷ் பட நடிகைக்கு நேர்ந்த சோகம்... தள்ளிப்போன கல்யாணம்...!

First Published | May 28, 2021, 9:05 PM IST

ஜெய்ப்பூர் அரண்மனையில் செம்ம தடபுடலாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திருமணம் நேரத்தில் வெளியான சோகமான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

கொரோனா 2வது அலையால் திரையுலகினர் பலரும் பல்வேறு சோதனைகளை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக பல திறமையான கலைஞர்களை திரையுலகம் இழந்து வருகிறது. தற்போது கொரோனாவால் பிரபல நடிகையின் திருமணம் தள்ளிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தீப் கிஷன், விக்ராந்த் நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மெஹ்ரீன் பிர்சாதா.
Tap to resize

விஜய் தேவரகொண்டா தமிழில் நடித்த நோட்டா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சயமானார். தனுஷ், சினேகா நடித்த பட்டாஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.
தமிழில் படங்கள் இல்லாவிட்டாலும், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் மெஹ்ரீனுக்கும், ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரனும், காங்கிரஸ் தலைவருமான பவ்யா பிஷ்னோய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர் அரண்மனையில் செம்ம தடபுடலாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திருமணம் நேரத்தில் வெளியான சோகமான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் கோலாகலமாக முடிந்த நிலையில், ஆண்டின் இறுதியில் திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். நிச்சயதார்த்தம் முடிந்த சில நாட்களிலேயே மெஹ்ரீன் பிர்சாதாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவர் தற்போது குணமாகிவிட்டார். மெஹ்ரீனை அடுத்து அவரின் வருங்கால கணவர் பவ்யா பிஷ்னோய் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே திருமண தேதியை ஒத்திவைத்துள்ளனராம்.

Latest Videos

click me!