Deva Song Secret : தமிழ் சினிமாவில் ஏராளமான கானா பாடல்களை கொடுத்துள்ள இசையமைப்பாளர் தேவா, ஒரே ஒரு பாட்டுக்காக சிறை வரை சென்றிருக்கிறது. அது எந்த பாட்டு என்பதை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் கானா இசைக்குத் தனி அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்த இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் தேனிசைத் தென்றல் தேவா. 90களில் இவரது இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைத்ததுடன், பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. குறிப்பாக, சென்னை மண்ணின் மணம் மாறாத கானா பாடல்களை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்ததில் தேவாவுக்குப் பெரும் பங்குண்டு. 80களின் இறுதியில் திரையுலகில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய தேவா, 90களிலும் 2000களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வந்தார்.
25
தேவா காலமானார்
மெலடி, காதல், குத்து, கானா என அனைத்து வகையான பாடல்களிலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். சமீப காலமாக திரைப்படங்களுக்கு அதிக அளவில் இசையமைக்காவிட்டாலும், இசைக் கச்சேரிகள் மூலம் தொடர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தேவாவின் இசை நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருந்த தேவா, இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. அவரின் உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
35
தூக்குத் தண்டனை கைதியைத் தேடிச் சென்ற தேவா!
இந்நிலையில், தேவாவின் இசையில் உருவான சூப்பர் ஹிட் கானா பாடல் ஒன்றின் பின்னணியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. பிரபுதேவா நடிப்பில் வெளியான 'இந்து' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வா முனிம்மா வா முனிம்மா' பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடல்களில் ஒன்று. இந்தப் பாடலை முதலில் மனோவை வைத்துப் பாட வைக்கும் எண்ணம் தேவாவுக்கு இல்லையாம்.
அந்தக் காலகட்டத்தில் சென்னை வட்டார மொழியில் கானா பாடல்களை அசத்தலாகப் பாடக்கூடிய பழனியப்பன் என்ற பாடகரை வைத்து இந்தப் பாடலைப் பதிவு செய்ய விரும்பியிருக்கிறார் தேவா. ஆனால், அவரைத் தேடியபோதுதான் எதிர்பாராத தகவல் கிடைத்திருக்கிறது. கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பழனியப்பனுக்குத் தூக்குத் தண்டனையும் உறுதி செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்தப் பாடலுக்கு அவருடைய குரல்தான் பொருத்தமாக இருக்கும் என்பதில் உறுதியாக இருந்த தேவா, அவரைப் பாட வைப்பதற்கான முயற்சியில் நேரடியாகச் சிறைக்கே சென்றிருக்கிறார்.
சிறையில் இருந்த பழனியப்பனைப் பாட வைப்பது தொடர்பாக தேவா பேசியபோது, அங்கிருந்த சிறை அதிகாரி சில நிபந்தனைகளை விதித்ததாகக் கூறப்படுகிறது. பழனியப்பன் தூக்குத் தண்டனை கைதி என்பதால், பாடல் பதிவின்போது அவர் தப்பிச் சென்றுவிட்டால் அதற்கான பொறுப்பை தேவாதான் ஏற்க வேண்டியிருக்கும் என எச்சரித்திருக்கிறார். மேலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவருக்குக் கைவிலங்கு அணிவித்தபடியே பாட வைக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஒரு கலைஞனை கைவிலங்குடன் நிற்க வைத்து பாட வைப்பதில் தேவாவுக்கு உடன்பாடு இல்லையாம். இதனால் பழனியப்பனைப் பாட வைக்கும் தனது முடிவையே கைவிட்டிருக்கிறார்.
55
மனோ குரலில் உருவான மெகா ஹிட்!
இறுதியாக 'வா முனிம்மா' பாடலைப் பாடகர் மனோவை வைத்துப் பதிவு செய்திருக்கிறார் தேவா. வெளியானதும் அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, தமிழ் சினிமாவின் மறக்க முடியாத கானா பாடல்களில் ஒன்றாக மாறியது. ஒரு பாடலுக்குப் பொருத்தமான குரலைத் தேர்வு செய்வதற்காகத் தூக்குத் தண்டனை கைதியாக இருந்த பாடகரைத் தேடி சிறை வரை சென்றதும், கைவிலங்குடன் அவரைப் பாட வைக்க விரும்பாமல் அந்த வாய்ப்பையே கைவிட்டதும் தேவாவின் இசை மீதான ஈடுபாட்டையும் சக கலைஞர்கள் மீது அவர் வைத்திருந்த மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.