Tesla Light Show : 1 மில்லியன் டிக்கெட் விற்பனை –முதல் முறையாக ரஜினியின் கூலி படத்துக்காக டெஸ்லா லைட் ஷோ!

Published : Aug 04, 2025, 06:06 PM ISTUpdated : Aug 04, 2025, 09:04 PM IST

Coolie Movie Tesla Light Show in Dallas : அமெரிக்காவின் டல்லஸில் ரஜினிகாந்தின் கூலி படத்தின் 1 மில்லியன் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வரலாற்றில் முதல் முறையாக ரஜினியின் கூலி படத்திற்காக டெஸ்லா லைட் ஷோ நடைபெற்றது.

PREV
17
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அண்ட் ரஜினிகாந்த்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கூலி. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான் (சிறப்பு தோற்றம்), ஷோபின் ஷாஹீர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ரச்சிதா ராம், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர், கண்ணா ரவி, காளி வெங்கட், மோனிஷா பிளெசி ஆகியோர் பலரும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

27
கூலி அண்ட் லோகேஷ் கனகராஜ்

இதில், ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் இருவரும் நண்பர்கள். சத்யராஜின் மகள் தான் ஸ்ருதி ஹாசன் (பிரீத்தி ராஜசேகர்). கூலி படத்தின் டீசரை வைத்து பார்க்கும் போது சத்யராஜிற்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது. இதன் காரணமாக அவரை காப்பாற்றவோ அல்லது அவரது மகளுக்காகவோ ரஜினிகாந்த் வருகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதையாக இருக்கலாம் என்று தெரிகிறது.

37
ரஜினிகாந்த் அண்ட் கூலி

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பார்க்க ஏராளமான காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்தப் படம் ரூ.1000 கோடி வசூல் குவிக்குமா என்பது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

47
லோகேஷ் கனகராஜ் பிராண்ட்:

மாநகரம் படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என்று மாஸ் படங்களை இயக்கியுள்ளார். தற்போது டபுள் மாஸாக இருக்கும் வகையில் கூலி படத்தை இயக்கியுள்ளார். ரஜினியின் படம் என்பதால், இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

57
கூலி பாக்ஸ் ஆபிஸ் வசூல்:

ஏற்கனவே வெளிநாடுகளில் கூலி படத்தின் முன்பதிவு படு ஜோராக நடிபெற்று வரும் நிலையில் இதுவரையில் மட்டும் ரூ.14 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்திருக்கிறது. வட அமெரிக்காவில் மட்டும் கூலி ரூ.9.8 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. படம் வெளியாக இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் முன்பதிவு விற்பனையின் வசூல் மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

67
ரஜினிகாந்த் கூலி டெஸ்லா லைட் ஷோ

இந்த நிலையில் தான் அமெரிக்காவின் டல்லஸ் பகுதியில் கூலி படத்தின் 1 மில்லியன் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதனை கொண்டாடும் விதமாக டெஸ்லா லைட் ஷோ நடைபெற்றது. இந்த லைட் ஷோவில் டெஸ்லா கார்கள் ஒளி, இசை மற்றும் வீடியோவுடன் தாண்டவம் ஆடியது போன்று காட்சி இடம் பெற்றிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் 'கூலி' படத்தின் டீசர் மற்றும் ரஜினியின் ஸ்டைல் பிரதிபலிக்கபட்டது

77
டெஸ்லா லைட் ஷோ

டெஸ்லா லைட் ஷோவானது முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு, தமிழ் சினிமா உலகத்தில் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. டல்லஸில் முதல் முறையாக ரஜினி படத்திற்காக டெஸ்லா ஷோ நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories