சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் என்றாலே, அந்த படத்தின் பூஜை போட்டதில் இருந்தே ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துவிடும் . எப்போது படம் குறித்த அப்டேட் வெளியாகும் என உலகம் முழுவதிலும் இருக்கும் ரஜினி ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருப்பதாக கூறி வருகிறார்கள்.
25
லோகேஷ் கனகராஜ்:
வேட்டையன் படத்தின், தோல்விக்கு பின்னர்... ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதால், இந்த படம் ரஜினிகாந்துக்கு தரமான ஹிட்டை கொடுக்கும் என இப்போதே ஆர்ப்பரித்து வருகின்ற்னர் ரசிகர்கள். பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில், ரஜினிகாந்துடன் ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா, அமீர் கான், உபேந்திரா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
'கூலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றைய தினம் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி, சன் பிச்சர்ஸ் நிறுவனம் சில புகைப்படங்களை வெளியிட்டது. இந்த புகைப்படங்களில் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த், உப்பேந்திரா, சத்யராஜ், மற்றும் நாகர்ஜூனாவுடன் இருந்தார். அதே போல் லோகேஷ் அமீர் கான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
45
அமேசான் ஓடிடி தளம்:
இந்த மாதத்தோடு 'கூலி' பட பிடிப்பு முடிவுக்கு வரும் என்றும், இதன் பின்னர் கூலி படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, தற்போது படத்தின் ஷூட்டிங் முடிவதற்கு முன்பே, மிகப்பெரிய தொகைக்கு இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றி உள்ளது அமேசான் ஓடிடி தளம்.
இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், சூப்பர்ஸ்டாரின் கூலி படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.120 கோடி-க்கு அமேசான் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் 650 கோடி வசூல் செய்த ஜெயிலர் திரைப்படமே ரூ.100 கோடிக்கு மட்டுமே டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனை ஆன நிலையில், இது அதைவிட 20 கோடிக்கு அதிகமாக விற்பனை ஆகியுள்ளது. அதே போல் அதிக தொகைக்கு டிஜிட்டலில் விலை போன ரஜினிகாந்தின் படம் இது தான் என கூறப்படுகிறது. தற்போது வரை இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாக வில்லை என்பது ககுறிப்பிடத்தக்கது.