நடிகை சித்ரா இறந்த அறையில் ஹேம்நாத் செய்த வேலை.! வெளியான உண்மைகள்... கிழியும் முகத்திரை!

First Published Mar 19, 2021, 11:43 AM IST

சின்னத்திரை நடிகை சித்ரா உண்மையில் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தாரா? என்கிற சந்தேகம், சித்ராவின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் மத்தியில் தற்போது வரை இருந்து வரும் நிலையில், அவரது பெற்றோர் இந்த சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாக சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அறைக்கே சென்று சந்தேகத்தை ஏற்படுத்தும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட விஜே சித்ரா, டிசம்பர் மாதம் 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
undefined
சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ஹேம்நாத்திற்கும், சித்ராவிற்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடந்திருந்தால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
undefined
இதனிடையே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார் சித்ராவின் தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணையை தொடங்கினார்.
undefined
ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்ய ஸ்ரீ சித்ராவின் குடும்பத்தினர், மாமனார், மாமியர், கணவர் ஹேமந்த், சக நடிகர், நடிகைகள், நண்பர்கள், ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், சித்துவின் உதவியாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
undefined
கிட்டதட்ட 15 பேரிடம் நடத்தப்பட்ட 16 பக்க விசாரணை அறிக்கையை கடந்த மாதம் கோட்டாட்சியர் திவ்ய ஸ்ரீ காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனிடையே சித்ராவின் தாயார் தனது மகளின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
undefined
தற்போது சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கை நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வரும் நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
undefined
சித்ராவின் கணவர் ஹேம்நாத் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே இவருடைய ஜாமீன் மனு நிராகரிக்க பட்ட நிலையில், சமீபத்தில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.
undefined
தொடர்ந்து தன்னுடைய மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என, சித்ராவின் பெற்றோர் போராடி வருகிறார்கள்.
undefined
இந்நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்ட, தனியார் ஓட்டல் அறையில் அவரது பொருட்களை எடுக்க, இரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
undefined
சித்ராவின் குடும்பத்தினர் முதலில் சென்று பொருட்களை எடுத்த போது, குறிப்பாக சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மின் விசிறி பெட்டில் இருந்து நிற்கும் தூரத்திற்கு தான் உள்ளது. இதனை அவரது பெற்றோர் புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
undefined
அதே போல், சுமார் 2000 மதிப்புள்ள மது பாட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே சித்ராவுடன் இருந்த போது, ஹேம்நாத் மது அருந்தியுள்ளது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் தெரியாது என பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.
undefined
தன்னுடைய மகளை தூக்கில் மாட்டி கால்களை இழுத்து கொலை செய்துவிட்டு ஹேம்நாத் ஜன்னல் வழியாக தப்பித்து வெளியே சென்றிருக்க வேண்டும் என, என ஆணித்தனமாக தங்களுடைய சந்தேகத்தை முன் வைத்துள்ளனர் சித்ராவின் பெற்றோர்.
undefined
click me!