Chatha Pacha: கேரளாவில் வசூல் சாதனை படைத்த 'சத்தா பச்சா' திரைப்படம், தற்போது தமிழில் வெளியாகிறது. மம்முட்டி மற்றும் துல்கர் சல்மானின் சிறப்புத் தோற்றத்தையும் மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
கேரளாவில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வரும் "சத்தா பச்சா" (Chatha Pacha: The Ring of Rowdies) திரைப்படம், இப்போது தமிழ் ரசிகர்களைக் கவரத் தயாராகிவிட்டது. இப்படத்தின் விறுவிறுப்பான தமிழ் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
ஃபோர்ட் கொச்சியின் பின்னணியில் ஒரு ஆக்ஷன்-காமெடி த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ளது. 90-களில் பிறந்த குழந்தைகளுக்கு விருப்பமான WWE விளையாட்டை மையமாக வைத்து இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்கள், தங்கள் ஊரில் ஒரு மல்யுத்த கிளப்பைத் தொடங்கி அதில் சாதிக்க நினைப்பதும், அவர்களுக்கு வரும் அரசியல் மற்றும் உள்ளூர் தாதாக்களின் எதிர்ப்புகளுமே படத்தின் மையக்கரு. மல்யுத்த வீரர்களுக்கு இடையே இருக்கும் மோதல், சகோதர பாசம் எனப் படம் முழுக்க சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் சரிவிகிதத்தில் கலந்துள்ளது.
புதுமுக இயக்குநர் அத்வைத் நாயர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரோஷன் மேத்யூ, அர்ஜுன் அசோகன், விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மம்முட்டி - துல்கர் சல்மான்
தந்தை-மகன் இருவருமே இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். குறிப்பாக மம்முட்டியின் 'புல்லட் வால்டர்' கதாபாத்திரம் திரையரங்குகளில் விசில் பறக்க வைக்கிறது. லட்சுமி மேனன் & சித்திக் ஆயோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துப் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளனர்.
கடந்த ஜனவரி 22-ம் தேதி மலையாளத்தில் வெளியான இப்படம், நான்கே நாட்களில் ரூ. 25 கோடி வசூலித்தது. தற்போது வரை மொத்தமாக ரூ. 40 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி நடை போடுகிறது.
56
மோகன்லால் வாழ்த்து
இப்படத்தின் முதல் டிக்கெட்டை நடிகர் மோகன்லால் வாங்கிப் படக்குழுவினரை வாழ்த்திய வீடியோ வைரலானது.
66
ஷங்கர்-இஹ்ஸான்-லோய்
புகழ்பெற்ற இசையமைப்பாளர் கூட்டணி மலையாளத் திரையுலகிற்கு இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளனர். இவர்களின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
தலைப்பின் ரகசியம்
'சத்தா பச்சா' என்ற வார்த்தை பிரபல நடிகர் சலீம் குமார் நடித்த கல்யாணராமன் பட டயலாக்கில் இருந்து எடுக்கப்பட்டது. இதற்கு 'வாழ்வா-சாவா' (Do or Die) என்று பொருள்.
தமிழ் வெளியீடு
பிவிஆர் ஐநாக்ஸ் பிக்சர்ஸ் (PVR INOX Pictures) நிறுவனம் இப்படத்தைத் தமிழில் பிப்ரவரி 6-ம் தேதி (நாளை) வெளியிடுகிறது. கேரளாவில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த இந்தப் படம், தமிழுக்கும் ஏற்ற ஒரு மாஸ் மற்றும் எமோஷனல் ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்யுத்த விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்தப் படம் ஒரு ஸ்பெஷல் விருந்தாக அமையும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.