Arjun Kapoor :48 வயது காதலியுடன் 37-வது பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு பறந்த போனி கபூர் மகன் - வைரலாகும் போட்டோஸ்

First Published | Jun 24, 2022, 7:30 AM IST

Arjun Kapoor : வருகிற ஜூன் 26-ந் தேதி நடிகர் அர்ஜுன் கபூர் தனது 37-வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வெளிநாட்டு சுற்றுலா அழைத்து சென்றுள்ளார் மலைக்கா அரோரா. 

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன் கபூர். வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரின் மகனான இவர், பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார். நடிகை மலைக்கா அரோரா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தைய தையா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார்.

இவர் கடந்த 1998-ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு அர்ஹான் என்கிற மகனும் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான சில ஆண்டுகளிலேயே அர்பாஸ் கானை பிரிந்த மலைக்கா அரோரா, மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

Tap to resize

தற்போது 48 வயது ஆகும் மலைக்கா அரோரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்டார். இவர் மலைக்கா அரோராவை விட 12 வயது சிறியவர் ஆவார். வயதை பொருட்படுத்தாமல் இருவரும் காதலித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்தும் வருகின்றனர்.

வருகிற ஜூன் 26-ந் தேதி நடிகர் அர்ஜுன் கபூர் தனது 37-வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வெளிநாட்டு சுற்றுலா அழைத்து சென்றுள்ளார் மலைக்கா அரோரா. அவர்கள் எந்த நாட்டுக்கு செல்ல உள்ளார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இருவரும் ஜோடியாக மும்பை விமான நிலையத்துக்கு வந்த போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்...சில்லுனு ஒரு காதல் ட்ரிப்... குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற சூர்யா - வைரலாகும் டூர் வீடியோ

Latest Videos

click me!