Blast and Parimala And Co Box Office : அர்ஜுன் நடித்த பிளாஸ்ட் திரைப்படம், பாண்டிராஜ் இயக்கிய பரிமளா அண்ட் கோ படத்தைவிட டபுள் மடங்கு வசூலை வாரிசுருட்டி சாதனை படைத்துள்ளது.
பாண்டிராஜ் இயக்கிய பரிமளா அண்ட் கோ திரைப்படம் திரையரங்குகளில் கடந்த ஜூன் 5-ந் தேதி ரிலீஸ் ஆனது. அப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, சாண்டி மாஸ்டர், சஞ்சனா, சிங்கம்புலி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பரிமளா அண்ட் கோ திரைப்படத்திற்கு போட்டியாக வேறு எந்த பெரிய படமும் ரிலீஸ் ஆகாததால், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் பண்ணும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் வசூலிலும் பெரியளவில் சோபிக்கவில்லை.
24
பரிமளா அண்ட் கோ வசூல்
பரிமளா அண்ட் கோ திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் மட்டும் ரூ.2.23 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. இதன்மூலம் தற்போது 3 நாட்கள் முடிவில் ஒட்டுமொத்தமாக 6.70 கோடி வசூலித்துள்ளது. இப்படம் வார நாட்களிலும் அதன் வசூல் வேட்டையை தொடருமா என்பது புரியாத புதிராக உள்ளது. பரிமளா அண்ட் கோ திரைப்படத்தைவிட நேற்று அதிக வசூலை வாரிக்குவித்த படம் பிளாஸ்ட். அர்ஜுன் ஹீரோவாக நடித்த இப்படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.
34
பிளாஸ்ட் பாக்ஸ் ஆபிஸ்
பிளாஸ்ட் திரைப்படம் நேற்று மட்டும் இந்தியாவில் ரூ.4.35 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. இதில் அப்படத்தின் தமிழ் பதிப்பு மட்டும் ரூ.3.92 கோடி வசூலித்துள்ளது. அதன் தெலுங்கு வெர்ஷன் ரூ.43 லட்சம் வசூலித்திருக்கிறது. அப்படம் இதுவரை உலகளவில் ரூ.52.80 கோடி வசூலித்துள்ளது. நடிகர் அர்ஜுனின் கெரியரில் மிகப்பெரிய கம்பேக் படமாக இது அமைந்துள்ளது. அவர் ஹீரோவாக நடித்த படம் ஹிட்டாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் இந்த பிளாஸ்ட் படம் அவரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.
பிளாஸ்ட் திரைப்படத்தை சுபாஷ் கே ராஜ் இயக்கி உள்ளார். அப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் கணவன், மனைவியாக நடித்துள்ள இப்படத்தில் அவர்களின் மகளாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்து உள்ளார். அதிரடி ஆக்ஷன் படமாக வந்துள்ள இதற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.