Mari Selvaraj: இயக்குனர் மாரி செல்வராஜ், உதாரணம் சொல்வதாக ஊனமுற்றவர்களை பற்றி பேசி, தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். பைசன் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு திறமையான இயக்குனர் என்பதை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வந்தாலும், இவரின் படங்கள் அனைத்துமே ஜாதி சாயம் பூசுவது போல் வெளியாகி வருவதாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இதற்கு முன்பு இவர் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், மாமன்னன், வாழை, கர்ணன் போன்ற படங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியே படமாக்கி இருந்தார்.
26
மணத்தி கணேசன் வாழ்க்கை படம்:
வாழை படத்தின் வெற்றியை தொடர்ந்து, மாரி செல்வராஜ் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் படம் 'பைசன் காளமாடன்'. இந்த படத்தை... இயக்குனர் பா ரஞ்சித் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். மேலும் இப்படம் மணத்தி கணேசன் என்கிற கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
36
துருவ் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை:
துருவ் விக்ரம் இதற்க்கு முன்பு , 'வர்மா', 'மஹா' என இரு படங்களில் நடித்திருந்தாலும்... இந்த படம் இவருக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னர் இவர் நடிப்பில் வெளியான படங்களில் இருந்து துருவின் நடிப்பு இப்படத்தில் முதிர்ச்சியாக இருந்ததையும் பார்க்க முடிந்தது. 'பைசன் காளைமாடன்' படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.
46
மாரி செல்வராஜின் கதைக்களம்:
மேலும் நடிகை ரெஜிஷா விஜயன், லால், அமீர், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் 17-ஆம் தேதி ரிலீசான இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருந்தார். மாரி செல்வராஜ் தன்னுடைய வழக்கமான பாணியில்... 90 களில் தென் மாவட்டங்களில், அரங்கேறிய மிக மோசமாக சாதிய படுகொலைகள் நடந்த நேரத்தில், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என பல பிரச்சனைகள் வந்தபோதும், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த கபடி வீரர் ஒருவர் எப்படி கபடி போட்டியில் தேசிய அளவில் பங்கேற்று அர்ஜூனா விருது பெறுகிறான் என்பதை உருக்கமாக பேசி இருந்தது இப்படம்.
56
சூப்பர் ஸ்டார் வாழ்த்து:
இந்த படத்திற் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் மாரி செல்வராஜை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய நிலையில்... இதுகுறித்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் மாரி செல்வராஜ். இது ஒருபுறம் இருக்க, செய்தியாளர்கள் கேள்விக்கு உதாரணம் கூறுகிறேன் என பேசி வாயை விட்டு சிக்கி இருக்கிறார். இதை தொடர்ந்து வழக்கம் போல் இவரை வசைபாடி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
அதாவது மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன், பைசன் போன்ற படங்களில் வெள்ளையாக இருக்கும் கேரள நடிகைகளுக்கு கருப்பு மேக்கப் போட்டு நடிக்க வைத்திருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி... ஏன் கருப்பான நடிகைகளையே நடிக்க வைத்திருக்கலாமே என கேட்டனர். இதற்கு பதில் சொன்ன மாரி, ' திரைப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்திரம் ஊனமுற்றவர் என்றால், உண்மையிலேயே ஊனமுற்றவரை நடிக்க வைத்து அவரை கஷ்டப்படுத்த முடியுமா? அதே போல தான் இதுபோன்ற கதாபாத்திரத்தில் யார் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்களோ அவர்களை தான் தேர்வு செய்தோம் என கூறி இருந்தார்.
இதை கேட்ட நெட்டிசன்கள் கருப்பாக இருக்கும் நடிகைகளுக்கு அர்ப்பணிப்பு இல்லை என்பதை எப்படி சொல்கிறீர்கள்? பேச வேண்டும் என்பதற்காக எதையும் பேசாதீர்கள். உதாரணத்திற்கு கூட ஊனமுற்றவர்களை பற்றி பேசுகிறீர்கள் என வெளுத்து வாங்கி வருகிறார்கள்.