தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஓவியா இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விமல் உடன் களவாணி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்ற தன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். பிக்பாஸ் பிரபலங்களுக்கு ரசிகர்கள் ஆர்மி அமைக்கும் முறைக்கு முதலில் சொந்தக்காரியானவர் ஓவியா தான். கேரளத்து பைங்கிளியாக இருந்தாலும் தமிழில் ஓவியாவிற்கு தமிழ் ரசிகர்கள் அதிகம். நடிகை ஓவியாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் #HappyBirthdayOviya என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ஓவியா ஆர்மி தெறிக்கவிட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் ஓவியாவின் யாரும் பார்த்திடாத அரிய புகைப்பட தொகுப்பை கண்டு ரசியுங்கள்....