தன்னுடைய 17 வயதிலேயே சீரியல் ஹீரோயினாக விஜய் டிவி தொலைக்காட்சியில், கலக்கியவர் ஷிவானி. இவர் நடித்த ''பகல் நிலவு' சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சின்னத்திரையில் சேலை கட்டிய குயிலாக வலம் வந்த ஷிவானி, திடீர் என மாடர்ன் உடைக்கு மாறி, இன்ஸ்டாகிராம் பக்கத்தையே கவர்ச்சியால் தீ மூட்டினார். எனவே இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே தற்போது உள்ளது. இவர் எந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டாலும் லைக்குகள் அள்ளுகிறது.
சீரியலை தாண்டி ஷிவானியை, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், அது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஜனவரி மாதம் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான். இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு சிறப்பாக வெளியாடினார்.
முதல் இரண்டு வாரங்களையே வெளியேறி விடுவார் என எதிர்பார்த்த நிலையில், ஆரம்பத்தில் மற்ற போட்டியாளர்களுடன் பேசுவதில் தயக்கம் இருந்தாலும் பின்னர், நன்கு பேசி பழகி கடைசி இரண்டு வாரத்தில் தான் வெளியேறினார். இன்னும் சிறப்பாக விளையாடி இருந்தால் டைட்டில் வின்னராக ஷிவானி வருவதற்கும் வாய்ப்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்டிவாக இருக்கும் ஷிவானி, பட வாய்ப்புகளை பிடிக்க தீவிரமாக இருக்கிறார். சில இயக்குனர்கள் இவரிடம் கதை கூறி வந்தாலும், கதையை தேர்வு செய்வதில் அதிகம் கவனம் எடுத்து கொள்கிறார்.
மாடர்ன் மற்றும் ஹோமிலி என அனைத்து விதமான கதாபாத்திரத்துக்கும் நச்சென்று பொருந்தும் அளவிற்கு இவரது உடல் வாகும் உள்ளது. இந்நிலையில் வெளிர் நிற பச்சை சேலையில்... பொங்கும் அழகில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் தாறு மாறாக வர்ணித்து லைக்குகளை குவித்து வருகிறார்கள்.