BiggBoss Abinay: சமந்தா ஸ்டைலில் அபினய் பெயரை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கிய மனைவி! என்ன காரணாம்.?

Published : Jan 03, 2022, 03:42 PM ISTUpdated : Jan 03, 2022, 03:49 PM IST

பிக்பாஸ் சீசன் 5 (Biggboss 5 tamil) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைதியான போட்டியாளராக பார்க்கப்பட்ட  அபினய்யின் மனைவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திடீர் என, அபினை பெயரை நீக்கியுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
19
BiggBoss Abinay: சமந்தா ஸ்டைலில்  அபினய் பெயரை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கிய மனைவி! என்ன காரணாம்.?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 18 போட்டியாளர்களுடன் அமோகமாக துவங்கியது. இதில் இந்த முறை நடிகர்களை தாண்டி திரையுலகை சேர்ந்த மற்ற கலைஞர்கள் சிலரும் கலந்து கொண்டு விளையாடினர்.

 

29

இவர்களில் ஏற்கனவே சில படங்களில் நடித்தும், பெரிதாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையாமல் இருந்த ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி அவர்களின் பேரன் அபினையும் கலந்து கொண்டு விளையாடினார்.

 

 

39

மிகவும் நேர்மையாக இவர் பிக்பாஸ் விளையாட்டை விளையாடினாலும், இவரது விளையாட்டு விறுவிறுப்பு இல்லாமல் சென்றதால், குறைந்த வாக்குகளின் அடிப்படையில் கடந்த மாதம் வெளியேறினார்.

 

 

 

49

அதே நேரம் பாவினி மற்றும் அபினை கெமிஸ்ட்ரி பிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் அதிகமாகவே பேசப்பட்டது. குறிப்பாக டாஸ்க் ஒன்றின் போது ராஜு நேரடியாகவே இதுகுறித்து அபினையிடம் கேள்வி எழுப்பி திடுக்கிட வைத்தார்.

 

 

59

ஆனால் இதுகுறித்து தற்போது வரை இருவருமே வெளிப்படையாக எதையும் கூறாததது தான் இந்த பேச்சுக்கு காரணம் என தொகுப்பாளர் கமல் ஹாசனும் தன்னுடைய கருத்தை தெரிவித்தது மட்டும் இன்றி இவர்கள் குறித்த குறும்படம் ஒன்றையும் போட்டார்.

 

69

அபினை பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது கூட அபினய் குறித்து தனக்கு நன்றாக தெரியும் என்றும் அவரை நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன் என்றும் அபினய் மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து சில வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

79

அதேபோல் எலிமினேஷனுக்கு பிறகு எனக்கு குடும்பம் தான் எல்லாவற்றையும் விட முக்கியம் என்றும் அபினய் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

89

இந்நிலையில் திடீர் என அபினையின் மனைவி அபர்ணா சமந்தா ஸ்டைலில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அபினை பெயரை நீக்கி விட்டு அபர்ணா வரதராஜன் என மாற்றியுள்ளது ரசிகர்களின் பல்வேறு யுகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

 

 

99

திடீர் என இந்த பெயர் மாற்றத்திற்கு காரணம் கருத்து வேறுபாடா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதை விரைவில் அவர்களே விளக்கம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Read more Photos on
click me!

Recommended Stories