கண்ணுல ஸ்டைலா கூலிங்கிளாஸ்... அப்பாவோட வேட்டி, சட்டையில் வேற லெவலுக்கு போஸ் கொடுத்த ஷெரின்...!
First Published | Jun 12, 2020, 4:22 PM ISTசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். இருந்தாலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகே பட்டி, தொட்டி எல்லாம் ஷெரினின் பெருமை பரவ ஆரம்பித்தது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் ஷெரின், தற்போது தனது அப்பாவின் உடையில் அசத்தலாக கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை வாரிக்குவிக்கிறது.