Sunny Deols: இன்று கோடிகளில் சம்பளம்… ஆனால் முதல் படத்தில் சன்னி தியோலுக்கு கிடைத்தது எவ்வளவு?

Published : Jan 19, 2026, 02:19 PM IST

சன்னி தியோல் தனது பார்டர் 2 படத்திற்காக தற்போது வெளிச்சத்தில் இருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

PREV
16
சன்னியின் முதல் படம்

சன்னி தியோல் தனது பார்டர் 2 படத்தால் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இந்த போர் டிராமா படம் பாக்ஸ் ஆபிஸில் அமோக வரவேற்பை பெறும் என வர்த்தக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இதற்கிடையில், சன்னியின் முதல் படம், அறிமுக வயது மற்றும் சம்பளம் பற்றி தெரிந்து கொள்வோம்.

26
'பேதாப்' படத்தில் அறிமுகம்.!

சன்னி தியோல் 1983ல் வெளியான 'பேதாப்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அப்போது அவருக்கு 26 வயது. இப்படத்தை ராகுல் ரவைல் இயக்கியிருந்தார். விஜேதா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

36
ரூ.5 லட்சம் சம்பளம்.!

சன்னி தியோல் 'பேதாப்' படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். முதல் படத்திற்காக அவருக்கு ரூ.5 லட்சம் சம்பளம் கிடைத்ததாக கூறப்படுகிறது. ரூ.3 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.13.5 கோடி வசூல் செய்தது. 

46
சரியான ஜோடி செம கலெக்ஷன்

சன்னி தியோலின் முதல் ஹீரோயின் அம்ரிதா சிங். இருவரும் 'பேதாப்' படத்தின் மூலம் அறிமுகமானார்கள். திரையில் இவர்களது ஜோடி மிகவும் ரசிக்கப்பட்டது. பின்னர் இருவரும் 'சன்னி' என்ற படத்தில் நடித்தனர்.

56
ரொமான்டிக் மியூசிக்கல் படம்!

'பேதாப்' ஒரு ரொமான்டிக் மியூசிக்கல் படம். இதன் கதையை ஜாவேத் அக்தர் எழுதினார். ராகுல் ரவைல் இயக்கிய இப்படத்தை பிக்ரம் சிங் தயாரித்தார். ஷேக்ஸ்பியரின் 'தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூ' நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.

66
பார்டர்ல சந்திப்போம் மக்களே.!

சன்னி தியோலின் 'பார்டர் 2' ஜனவரி 23 அன்று வெளியாகிறது. அனுராக் சிங் இயக்கியுள்ளார். வருண் தவான், அஹான் ஷெட்டி, தில்ஜித் தோசன்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் பட்ஜெட் ரூ.150-250 கோடி.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories