அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் தியாகேஸ்வரன், ‘ஒரு சம்பவத்துக்கு பல வழக்குகள் பதிவு செய்ய முடியாது. ஆனால் தமிழகம் முழுவதும் பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்றுக்கூட முன்ஜாமீன் மனு மீதான உத்தரவில், கோவை வழக்கிற்கு சென்னையிலேயே ஆஜராகலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது’ என்று வாதிட்டார்.