அருவா படத்தில் சூர்யாவுக்கு பதில் இவரா? படக்குழு வெளியிட்ட அவசர தகவல்!

First Published | Aug 10, 2020, 6:40 PM IST

நடிகர் சூர்யா இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ள, அருவா படம், கைவிடப்பட்டதாகவும், சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடிக்க உள்ளதாகவும் தொடர்ந்து தகவல் வெளியான நிலையில் இது குறித்து படக்குழு தற்போது விளக்கம் அளித்துள்ளது.
 

இயக்குனர் ஹரியின் வெற்றி கூட்டணியில் ஆறாவது முறையாக சூர்யா கைகோர்க்க உள்ள திரைப்படம் 'அருவா'. இந்த படம் பற்றி ஏற்கனவே அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி, படத்தின் முன் ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகையை தேர்வு செய்வது குறித்த பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடந்து வந்த நிலையில், இந்த படத்தில் தற்போது நடிகை ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
Tap to resize

ஆனால் திடீர் என கொரோனா பிரச்சனை காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்பு பணிகளும் முற்றிலும் முழுமையாக நிறுத்தப்பட்டது போல் அருவா பட பணிகளும் இழுத்து மூடப்பட்டது.
கடந்த நான்கு மாதமாக, படப்பிடிப்பு பணிகள் நடைபெறாமல் அனைத்து பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். எனவே அரசு திம்பவும் படப்பிடிப்பு பணிகளுக்கு அனுமதி கொடுத்தால் மட்டுமே மீண்டும் படப்பிடிப்பு பணிகள் துவங்கும்.
மேலும் நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் நடிக்க கதை ஒன்று கேட்டதாகவும், அந்த கதை அவருக்கு பிடித்து விட்டதாலும் அடுத்ததாக இந்த படத்தில் நடிக்க அவர் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியானது.
இதனால் அருவா படம் டிராப் ஆகிவிட்டதாகஒரு தகவல் வெளியானது. மேலும் அருவா படத்தில், நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது இதுகுறித்து தெரிவித்துள்ள படக்குழு, படம் ட்ராப் ஆகவில்லை என்றும், கொரோனா பிரச்சனைகள் முடிவுக்கு வந்தவுடன் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அருவா பட வதந்திக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!