அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!

Published : Dec 09, 2025, 10:56 PM ISTUpdated : Dec 10, 2025, 02:45 PM IST

Aranthangi Nisha Stunning Transformation : அறந்தாங்கி நிஷா வெறும் 50 நாட்களில் தனது உடல் எடையை 14 கிலோ குறைத்து அனைவருக்கும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் கொடுத்துள்ளார்.

PREV
15
பட்டிமன்ற மேடையிலிருந்து பிக் பாஸ் வரை...

நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அறந்தாங்கி நிஷா, தனது தனித்துவமான பேச்சுத் திறமையால் பட்டிமன்றங்கள் மட்டுமின்றி மேடைப் பேச்சுகள் மூலமாகவும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தார். சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோஸ் மற்றும் சமூக ஊடகங்கள் என எப்போதும் பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கும் ஆற்றலும், துணிச்சலும், தைரியமும் கொண்டவர்..

25
சின்னத்திரை நயன்தாரா:

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் ஷோக்களில் கலந்து கொண்டு தன்னை சின்னத்திரை நயன்தாரா என்று அடிக்கடி கூறிக் கொள்வார். கலக்க போவது யாரு, ராமர் வீடு, மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை என்று பல நிகழ்ச்சிகளில் இவரது பங்களிப்பு அதிகளவில் இருந்துள்ளது.

35
சின்னத்திரையின் மூலமாக வெள்ளித்திரை:

ரஜினியின் ஜெயிலர்', தனுஷின் திருச்சிற்றம்பலம்', சிவகார்த்திகேயனின் சீமராஜா' போன்ற படங்களில் நடித்து தனது நடிப்புத் திற்மையை வெளிப்படுத்தினார். 'கருப்பு ரோஜா' என்ற யூடியூப் சேனல் மூலம் சமையல் குறிப்புகள் மற்றும் Vlogs பதிவிட்டு இணையத்திலும் மிகவும் பிரபலமாக இருக்கிறார்.இவர் பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டு மேலும் கவனம் ஈர்த்தார்.

45
குறுகிய காலத்தில் உடல் எடை குறைப்பு: ஆளே மாறிய நிஷா!

இப்படி பல தளங்களில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கும் நிஷா, சமீபத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக உடல் எடையைக் குறைத்து மிகவும் ஸ்லிம்மாக ஆளே மாறியுள்ளார். நிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவின்படி, மிகக் குறுகிய காலத்தில் — அதாவது, வெறும் 50 நாட்களில் 14 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

குறிப்பு: நிஷாவின் யூடியூப் சேனலில், கடந்த சில மாதங்களாக ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நிபுணர் ஆலோசனையின் கீழ் அவர் உணவு முறை மூலமாகவே இந்தக் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளார் என்பது உறுதியாகிறது.

55
Aranthangi Nisha Weight Loss Secrets உடல் எடை குறைப்பில் கவனிக்க வேண்டியவை

நிஷாவின் உடல் எடை குறைப்பு மாற்றம் பாராட்டுக்குரியது என்றாலும், ஆரோக்கிய ஆலோசகர்கள் பொதுவாகக் குறுகிய கால தீவிர டயட்களைப் பரிந்துரைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம்: டயட் முடிந்து சிறிய கால இடை வெளிக்கு பிறகு மீண்டும் உடல் எடை அதிகரிக்க கூடும். அதனால் எப்போது நிரந்தரமான தீர்வுக்கு உடனடியாக மருத்துவர்களை கலந்தாசிப்பது மிகவும் நன்மை அளிக்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories