Aranthangi Nisha : ஹிஜாப் போடமாட்டிங்களா?.. நெட்டிசனின் கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்த அறந்தாங்கி நிஷா!

Kanmani P   | Asianet News
Published : Feb 23, 2022, 02:52 PM IST

Aranthangi Nisha : “ நீங்க முஸ்லீம்தானே ஏன் ஹிஜாப் போடமாட்டிங்களா ?”, “அறந்தாங்கி நிஷாவிடம் நெட்டிஷன் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார் அதற்கு பதில் பொட்டில் அடித்தது போல பதில் கூறியுள்ளார் நிஷா... 

PREV
18
Aranthangi Nisha : ஹிஜாப் போடமாட்டிங்களா?.. நெட்டிசனின் கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்த அறந்தாங்கி நிஷா!
aranthangi nisha

எதிலும் சாதிக்க திறமை இருந்தால் போதும், அழகு ஒரு பொருட்டே இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து, பலருக்கு எடுத்து காட்டாக இருந்து வருபவர் அறந்தாங்கி நிஷா.

28
aranthangi nisha

இவர் காமெடி திறமையை நிரூபிக்க, கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை வாயிக்கு வந்த படி பேசினாலும், அவர்கள் அனைவரும் அறந்தாங்கி நிஷாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருவது தான் இவருடைய மிகப்பெரிய வெற்றி.

38
aranthangi nisha

அதே நேரத்தில், வளர்ந்து வரும் நேரத்தில் குழந்தை பெற்று கொண்டால் தன்னுடைய கேரியர் பாதித்துவிடும் என என்னும் பலருக்கு இவர் சிறந்த உதாரணம். 

48
aranthangi nisha

இவர் கர்ப்பமாக இருக்கும் போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதனை தன்னுடைய சவாலாகவே ஏற்று, சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மட்டும் இன்றி, அழகிய பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

58
aranthangi nisha

விஜய் டிவியால் கிடைத்த பிரபலம், இவரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நகர்த்தி சென்றது. ஒரு சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார். 

68
aranthangi nisha

பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதன் மூலம் சில விமர்சனங்களை சந்தித்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் மீண்டும் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த துவங்கினார். 

78
aranthangi nisha

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி, மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டார்.

 

88
aranthangi nisha

இந்த நிலையில் சமீபத்தில் நடைப்பெற்ற உள்ளாட்சி வாக்குப்பதிவில் ஓட்டுப்போட்டு தனது ஜனநாயக கடைமையை ஆற்றினார் நிஷா. அது குறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்..இந்த பதிவிற்கு கமெண்ட்  ஒருவர்.. “ நீங்க முஸ்லீம்தானே ஏன் ஹிஜாப் போடமாட்டிங்களா ?”...அதற்கு பதிலளித்த நிஷா 'நான் ஹிஜாப் அணிவேன்..அந்த புகைப்படத்தை பதிய மாட்டேன்' என பதிலளித்துள்ளார்.. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories