AR Rahman salary : சின்ன சின்ன ஆசை..இசை புயலின் முதல் பட சம்பளம் இவ்ளோ தானா?..

Published : Feb 19, 2022, 09:39 PM IST

AR Rahman salary :  ஏஆர் ரகுமான் முதல் முதலாக இசையமைத்த படம் மணிரத்தினத்தின் ரோஜா. இந்தப் படத்திற்கு வைரமுத்து வரிகளில் ஏஆர் ரகுமான் மெட்டுப் போட்ட ஆறு பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

PREV
18
AR Rahman salary : சின்ன சின்ன ஆசை..இசை புயலின் முதல் பட சம்பளம் இவ்ளோ தானா?..
AR Rahman

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு குழு இசையமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சேகர் என்பவரின் மகன்தான் ஏ.ஆர்.ரகுமான். அப்பாவின் மூலம் ஏ.ஆர்.ரகுமானுக்கு சின்ன வயதில் இருந்தே இசை ஆர்வம் இருந்தாலும், அவர் கனவு கண்டது என்னவோ கம்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று தான். 

28
AR Rahman

தந்தையின் மறைவிற்கு பிறகு குடும்பம் கடினமான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. எனவே இளம் வயதிலேயே ரூட்ஸ் என்ற ஒரு சிறிய இசைக்குழுவில் கீபோர்ட் ப்ளேயராக இணைந்த ரகுமான், பிரபல ட்ரம்மர் சிவமணி மற்றும் அவரது நண்பர்கள் ஜான் ஆண்டனி, சுரேஷ் பீட்டர்ஸ், ஜோஜோ மற்றும் இளையராஜா ஆகியோரிடம் பணியாற்றியுள்ளார். 

38
AR Rahman

இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கு முன்பு ஏ.ஆர்.ரகுமானின் இயற்பெயர் திலீப் குமார். தன்னுடைய 23 வயதில் காத்ரி என்ற மதகுருவின் வழிகாட்டுதலின் படி திலீப் குமார் ஏ.ஆர்.ரகுமானாக மதம் மாறினார். 

48
AR Rahman

ரோஜா படத்தில் துளிர் விட்ட, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை, ரசிகர்கள் மனதை பூரிக்கவைக்கும் பல பாடல்களால் தற்போது வரை நனைத்து வருகிறது. இவருக்கு ரோஜா படத்தில் வாய்ப்பு கிடைத்ததே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு தான்.

58
AR Rahman

கடந்த 1991-ம் ஆண்டு லியோ காபி விளம்பரத்துக்கு போட்ட மெட்டுக்கு அவார்ட் வாங்கினார் ரகுமான். அந்த விருது வழங்கும் விழாவில் இயக்குனர் மணிரத்தினத்தை சந்திக்க, அதன் மூலம் தான் ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழ் சினிமாவில் முதல் வாய்ப்பு கிடைத்தது.

68
AR Rahman

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முதல் திரைப்படம் 'யோதா' என்ற மலையாள திரைப்படம். ஆனால் முதலில் ரிலீஸ் ஆகியது ‘ரோஜா’ தான். ஆனால் ரோஜா படத்தின் கேசட்டில் ஏ.ஆர்.ரகுமான் பெயர் இருக்காது. 

78
AR Rahman

ரோஜா படத்துக்கு பின்னர் தான் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்பை ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கினார் மணிரத்னம். அது தற்போது அவர் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் வரை தொடர்கிறது.

88
AR Rahman

இந்நிலையில் ஆஸ்கார் நாயகன் முதல் படத்தில் வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது.. அதாவது திலீப் ஆக ஏஆர் ரகுமான் ரோஜா படத்திற்காக வாங்கிய சம்பளம் வெறும் ஐந்தாயிரம் ரூபாயாம். ரோஜா படத்தில் ஏஆர் ரகுமான் இசை அமைத்தது மட்டுமல்லாமல் இதில் இடம்பெற்றிருக்கும் 'சின்ன சின்ன ஆசை' என்ற பாடலையும் பாடியிருப்பார்.

Read more Photos on
click me!

Recommended Stories