Published : Feb 27, 2020, 05:37 PM ISTUpdated : Feb 27, 2020, 05:42 PM IST
தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானவர் பேபி அனிகா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ் என மூன்று மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் போட்டோஷூட்டை எல்லாம் பார்த்தால் விரைவில் நாயகியாகி விடுவார் எனவும் எதிர்பார்க்கலாம். 14 வயதாகும் அனிகா எக்கச்சக்கமாக போட்டோ ஷுட் எடுத்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதனை பார்க்கும் ரசிகர்கள், இந்தப்பொண்ணுக்கு 14 வயது தான் ஆகிறது. அதற்குள் ஹீரோயின் ஆசை வந்து ஆட்டிப்படைத்து வருகிறது. நயன்தாராவின் இடத்தை பிடிக்க இப்படி அநியாயத்துக்கு மாறிவிட்டார் எனக் குமுறுகிறார்கள்.