தமிழ் சினிமாவில் திரையிலும் சரி, நிஜத்திலும் சரி மீண்டும், மீண்டும் ரசிக்கத் தோன்றும் டாப் ஜோடிகளில் தல அஜித் - ஷாலினி தம்பதிக்கு எப்போது தனி இடம் உண்டு.
26
அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர் மீது எவ்வளவு அன்பும், மரியாதையும் வைத்துள்ளார்களோ அதே அளவிற்கு ஷாலினி மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர்.
36
சரண் இயக்கத்தில் அஜித் - ஷாலினி நடித்த அமர்களம் படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்களும் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட, அமர்களம் படம் வெளியான அடுத்த ஆண்டே, 2002ல் அஜித், ஷாலினி திருமணம் செம்ம கிராண்டாக நடந்தது.
46
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிய ஷாலினி சிறந்த குடும்பத் தலைவியாகவும், அனோஷ்கா, ஆத்விக்கிற்கு சிறந்த அம்மாவாகவும் தன்னுடைய கடமையை தொடர்ந்து வருகிறார்.
56
தன்னுடைய குடும்பத்தின் மீது கேமரா வெளிச்சம் படுவதில் அஜித்துக்கு விருப்பம் இல்லை என்றாலும், அவர்களுடைய குடும்ப புகைப்படம், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாவது உண்டு.
66
அந்த வகையில். தற்போது அஜித் - ஷாலினி தம்பதியின் ரொமாண்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் லாங் கவுன் அணிந்துள்ள ஷாலினி, தனது கணவர் அஜித்துடன் சேர்ந்து கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.