Gladiators Trailer: AK ரசிகர்களுக்கு இன்று 6:40 PM டிரீட்..தியேட்டரில் அதிரப்போகும் கிளாடியேட்டர்ஸ் டிரைலர்

Published : Sep 06, 2026, 10:14 AM IST

Gladiators Trailer: நடிகர் அஜித்குமாரின் (AK) ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த "கிளாடியேட்டர்ஸ்" (Gladiators: In Pursuit of Challenges) ஆவணப்படத்தின் சிறப்பு டிரெய்லர் இன்று செப்டம்பர் 6 மாலை 6:40 மணிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது

PREV
15
இன்று 6:40 PM - அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் டிரைலர்

சினிமாவில் மட்டுமல்ல… ரேஸிங் டிராக்கிலும் தனது வேகத்தையும் விடாமுயற்சியையும் நிரூபித்து வரும் அஜித்குமாரின் மற்றொரு பரிமாணத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் வகையில், அஜித்தின் ‘Gladiators – In Pursuit of Challenges’ ஆவணப்படத்தின் சிறப்பு டிரெய்லர் இன்று, செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6.40 மணிக்கு திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

25
யார் யார் கூட்டணி?

அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' (Gladiators - In Pursuit of Challenges) ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

35
என்ன சொல்லப்போகிறது Gladiators?

இது வெறும் அஜித்தின் ரேஸிங் காட்சிகளை தொகுத்த திரைப்படம் அல்ல. சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் களத்தில் அவர் சந்தித்த சவால்கள், விபத்துகள், தோல்விகள், மீண்டு வந்த தருணங்கள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஆவணப்படமாக உருவாகியுள்ளது.

குறிப்பாக, அஜித் தனது Ajith Kumar Racing அணியுடன் சர்வதேச endurance racing போட்டிகளில் பங்கேற்ற அனுபவங்களும் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் ரேஸிங் பயணத்தை நெருக்கமாகப் பதிவு செய்யும் இந்த ஆவணப்படத்தில், ரசிகர்கள் இதுவரை திரையில் பார்த்திராத AK-வின் வேறு ஒரு முகத்தை பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

45
திரையரங்கில் மட்டும் Special Treat!

பொதுவாக திரைப்பட டிரெய்லர்கள் முதலில் இணையத்தில் வெளியாகும் சூழலில், Gladiators Special Trailer-ஐ திரையரங்கில் ரசிகர்கள் பெரிய திரையில் பார்க்கும் வகையில் வெளியிடுவது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தேர்வு செய்யப்பட்ட முக்கிய திரையரங்குகளில் ரசிகர்களுக்காக இந்த டிரெய்லர் திரையிடப்பட உள்ளது. 3 நிமிடங்களுக்கும் அதிகமான இந்த டிரெய்லருக்கு மத்திய தணிக்கை வாரியம் U/A 13 சான்றிதழ் வழங்கியுள்ளது.

55
ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏன் இவ்வளவு அதிகம்?

“வேகம் மட்டும் போதாது…சவால்களை எதிர்கொள்ளும் மனதுதான் முக்கியம்” என்ற அஜித்தின் ரேஸிங் பயணத்தை மையமாகக் கொண்டிருப்பதால், Gladiators மீது ரசிகர்களின் ஆர்வம் ஆரம்பத்திலிருந்தே அதிகமாக உள்ளது.

இந்த ஆவணப்படம் அவரது சினிமா வாழ்க்கையைப் பற்றி மட்டும் பேசாமல், ரேஸர் அஜித் எப்படி உருவானார்? பாதியில் வந்த தடைகளை எப்படி கடந்து வந்தார்? சர்வதேச ரேஸிங் களத்தில் அவர் சந்தித்த அழுத்தங்கள் என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் இன்று மாலை 6.40 மணி… AK ரசிகர்களுக்கு வெறும் Trailer Time அல்ல; பெரிய திரையில் ‘ரேஸர் AK’-வை கொண்டாடும் இன்னொரு Mass Moment

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories