Aishwaryaa Rajinikanth :எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சு! ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Ganesh A   | Asianet News
Published : Feb 25, 2022, 05:36 AM IST

தனுஷ் மற்றும்  ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்களின் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். தனுஷ் வாத்தி மற்றும் நானே வருவேன் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதே போல் ஐஸ்வர்யாவும் ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கி வருகிறார்.

PREV
15
Aishwaryaa Rajinikanth :எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சு! ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் தனுஷுக்கும் (Dhanush), ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் (AIshwaryaa) கடந்த 2004-ம் ஆண்டு திருமணமானது. இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் இருவரும் அறிக்கை வெளியிட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். 

25

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த எதிர்பாரா அறிவிப்பு சமூக வலைதளங்களை அதிர வைத்தது. ரசிகர்கள் அனைவரும் ஏன் இந்த முடிவு, தயவு செய்து மீண்டும் சேர்ந்து விடுங்கள் என தனுஷுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல் இவர்களது விவாகரத்து முடிவால் நடிகர் ரஜினி (Rajini) கடும் மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறப்பட்டது.

35

தனுஷ் (Dhanush) மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியும் ஒரு புறம் மும்முரமாக நடந்து வந்தது. குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக இருவரது நட்பு வட்டாரத்தினரும், அவர்களை மீண்டும் சேர்ந்து வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

45

ஆனால் தற்போது தனுஷ் மற்றும்  ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்களின் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். தனுஷ் வாத்தி மற்றும் நானே வருவேன் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதே போல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் டிப்ஸ் மற்றும் பிரேர்னா அரோராவுக்காக மியூசிக் வீடியோ ஒன்றை தனது குழுவுடன் இணைந்து உருவாக்கி உள்ளார். அதற்கான, படப்பிடிப்பு காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைப்பெற்றது. 

55

தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த ஆல்பம் பாடலை தமிழில் அனிருத், தெலுங்கில் சாகர், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த் ஆகியோர் பாடியுள்ளனர். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பாடலின் ப்ரோமோ காதலர் தினத்தன்று வெளியாகி வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், முஸாபிர் (musafir) என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலின் ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... Valimai Review : தட்டித்தூக்கினாரா அஜித்?... வலிமை worth-ஆ... இல்லையா? - முழு விமர்சனம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories