ஊரடங்கில் சூப்பர் பிஸ்னஸை துவக்கிய வரலட்சுமி சரத்குமார்..! அவரே வெளியிட்ட தகவல்..!

Published : Jul 04, 2020, 05:37 PM IST

ஊரடங்கு ஓய்வை ஜாலியாக கழிக்கும் நடிகைகள் மத்தியில், புதிய தொழில் ஒன்றுக்கும் பிள்ளையார் சுழி போட்டுள்ளார் பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலக்ஷ்மி சரத்குமார்.  

PREV
19
ஊரடங்கில் சூப்பர் பிஸ்னஸை துவக்கிய வரலட்சுமி சரத்குமார்..! அவரே வெளியிட்ட தகவல்..!

கொரானா தொற்று வீட்டில் முடக்கி போடாததால் இவர், விளையாட்டாக துவங்கிய தொழில் இன்று, வெற்றிகரமாக வளர்ந்துள்ளது என அவரே தன்னுடைய ட்விட்டர்  பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

29

வாரிசு நடிகை என்கிற அங்கீகாரத்தோடு, நடிகர் சிம்புவுடன் 'போடா போடி ' படத்தில் நடித்தவர் நடிகை வரலட்சுமி. இந்த படத்திற்கு பின், இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும், போடா போடி படத்தில் இவர் செய்த பர்ஃபார்மென்ஸ் மற்றும், நடனத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

39

இந்த படத்தை தொடர்ந்து, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

49

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். இந்த திரைப்படம், இவருடைய திரையுலக பயத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

59

சமீப காலமாக நாயகியாக மட்டுமே நடிப்பேன் என அடம்  பிடிக்காமல், வில்லி, குணச்சித்திர வேண்டும் என கலந்து கட்டி நடித்து வருகிறார். விஜய் சேதுபதி பாணியில் நடிக்கும் இவருடைய திறமைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.

69

நடிப்பு என்பதை தாண்டி, சமூக பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் திரையுலகத்தில், பாலியல் ரீதியாக பாதிப்படும் பெண்களுக்காக சேவ் சக்தி என்கிற அமைப்பை வரலட்சுமி  நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

79

இதை தொடர்ந்து, தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து, கொரோனா ஊரடங்கால் பசி பட்டினியோடு இருக்கும் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார்.

89

மேலும் சமீபத்தில் இவருடைய அம்மா, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு யாரும் ரயில் நிலையத்தில் பிரட் பாக்கெட்டுகளை வழங்கியதற்கு பாராட்டுகளும் குவிந்தது.

99

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, நடிகை வரலட்சுமி சரத்குமார் பேக்கிங் பிஸ்னஸ் ஒன்றை 'லைப் ஆப் பை ' என்ற பெயரில் விளையாட்டாக துவங்கி, இதுவரை 100 பேருக்கு வெற்றிகரமாக விற்பனை செய்துவிட்டதாக சந்தோஷமாக தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories