புகழ் பெற்ற ரவி வர்மாவின் ஓவியங்களை போல பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம் எடுத்த போட்டோ ஷூட்டில் நடிகைகள் குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். லிமிடெட் எடிசன் காலண்டருக்காக நடத்தப்பட்ட போட்டோ ஷூட்டில் அச்சு அசலாக ஓவியம் போலவே இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.