இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.
2002ம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்ட ரோஜாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வெற்றிக்கொடி நாட்டிய ரோஜா, அரசியலிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
என்னதான் அரசியல், டிவி நிகழ்ச்சிகள் என பிசியாக வலம் வந்தாலும்... சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ரோஜா அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதோடு, லைக்குகளையும் குவித்து வருகிறது.
தற்போது தன்னுடைய காதல் கணவர், ஆர்.கே.செல்வமணியின் பிறந்தநாள் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.
ஆர்.கே.செல்வமணியின் பிறந்தநாள் பார்ட்டியில் பல பிரபலங்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்ட தன்னுடைய பிறந்தநாள் புகைப்படங்களை ரோஜா சமூக வலைத்தளத்தில் வெளியிட, தாறு மாறாக லைக்குகள் குவிந்து வருகிறது.
ஆர்.கே.செல்வமணி மற்றும் ரோஜா இருவருமே சும்மா பளபளக்கும் உடையில் பளீச் என போஸ் கொடுத்து ஜொலிக்கிறார்கள்.