நமீதா ரூட்டை பிடித்த விஷால் பட நடிகை... அதிரடி அவதாரம் எடுக்க தயார்...!

First Published | Oct 23, 2020, 5:50 PM IST

அரசியலில் பிசியாக வலம் வந்தாலும் நமீதாவின் சினிமா ஆசை அவரை விடுவதாக இல்லை. தற்போது திடீர் என தயாரிப்பாளராக மாறியுள்ளார். 

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நமீதா தற்போது பாஜகவில் இணைந்து அரசியலில் பிசியாக இருக்கிறார்.
என்ன தான் சினிமாவை விட்டு வெளியே வந்துவிட்டதாக வெளியில் வந்தாலும் எப்படியாவது மீண்டும் படவாய்ப்பை பிடித்து விட வேண்டும் என்பதற்காக விதவிதமாக போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வந்தார்.
Tap to resize

அரசியலில் பிசியாக வலம் வந்தாலும் நமீதாவின் சினிமா ஆசை அவரை விடுவதாக இல்லை. தற்போது திடீர் என தயாரிப்பாளராக மாறியுள்ளார். நமீதாவின் முதல் தயாரிப்பு திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வரும் 26-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷாலின் சிவப்பதிகாரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை மம்தா மோகன் தாஸ். அதன் பின்னர் தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட மம்தா மோகன் தாஸ். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
மேலும் கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அதிலிருந்து மீண்டு வந்து தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள மம்தா மோகன் தாஸ், தனது நண்பரான நோயல் பென் என்பவருடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். அதற்கு மம்தா மோகன்தாஸ் புரொடக்‌ஷன் என்றே பெயர் வைத்துள்ளார்.

Latest Videos

click me!