புத்தம்புது அழகு! ஹீரோயின் லுக்கில் தங்கமாய் மின்னும் குஷ்பு! நியூ ட்ரான்ஸ்பர்மேஷன் பார்த்து உருகும் ரசிகர்கள்

First Published | Sep 10, 2021, 11:07 AM IST

நடிகை குஷ்பு படு ஸ்லிம் லுக்கிற்கு மாற்றியுள்ள, நிலையில் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு உள்ளது. அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற சேலையில் தகதகவென மின்னும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
 

ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தவர். அரசியலிலும் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 

டி.வி. நிகழ்ச்சிகள், சினிமா, அரசியல் என படுபிசியாக இருந்தாலும் குஷ்பு பொறுப்பான குடும்பத் தலைவியாக தனது கடமைகளை தவறியதே கிடையாது. சோசியல் மீடியாவில் கூட கணவர் சுந்தர் சி, மகள்கள் அவந்திகா, அனந்திதா பற்றிய அப்டேடுகளையும், குடும்ப புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். 

Tap to resize

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் ரஜினிக்கு குஷ்பு தான் ஜோடி என்றும், இல்லை வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 இந்நிலையில் குஷ்பு தன்னுடைய சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கொழு கொழு லுக்கில் இருந்த குஷ்பு தேர்தலுக்கு முன்பிருந்தே உடல் எடையை குறைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியது பலரும் அறிந்த செய்தி. தற்போது அதன் பலனாக குஷ்பு சிக்கென ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார்.

இளம் நடிகைகளுக்கே சவால் விடும் விதமாக, 30 வருடத்திற்கு பார்த்தது போல் மாறி உள்ளார். இதை பார்த்து சில நெட்டிசன்கள் இது உண்மையில் குஷ்புவா? என ஆச்சர்யத்தோடு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
 

அதிலும் இந்த டிசைனர் மஞ்சள் நிற சேலையில் இவரது அழகையும், முகத்தில் உள்ள ஜொலிஜொலிப்பையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை போங்க... 
 

நீங்கள் ஹீரோயினா நடித்தால் என்ன என்று, ரசிகர்கள் பலர் தொடர்ந்து குஷ்பு விடம் கேட்டு வருகிறார்கள் என்றால் பாருங்கள்.

Latest Videos

click me!