மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படத்தின் கன்னட ரீமேக்கில் அனிகா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த பேச்சுகள் அடிபட்டு வந்தாலும் தற்போது வரை அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை.
தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கிறார்கள்.
அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
படங்களில் நடித்து வந்தாலும் மாடலிங்கில் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக பிசியாக வலம் வரும் அனிகா, அங்கு எடுக்கப்படும் கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.
அவ்வப்போது இடை தெரிய உடை அணிந்து அதிர்ச்சி கொடுக்கும் அனிகா, அழகு பதுமையாய் வயசுக்கு ஏற்ற உடைகளிலும் மிளிருவது உண்டு. அப்படிப்பட்ட புகைப்படங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே தாறுமாறு வைரலாகும்.
anikha
தற்போது ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக, சிங்கிள் ப்ளீட் சேலையில், செதுக்கிய சிலை போல் இவர் கொடுத்துள்ள போசுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஹீரோயின் வாய்ப்புகள் தேடி வர துவங்கி விட்டதால், தன்னை மெச்சூர்டாக காட்டி கொள்ள இது போன்ற சேலையில் புகைப்படம் வெளியிட துவங்கியுள்ளார் அனிகா.
கையில் மல்லிகை பூவை வைத்து கொண்டு, மெருகேறி அழகில் இவர் கொடுக்கும் இந்த அசத்தல் பொசுக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.