மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை அமைரா தஸ்துர் அங்கு விதவிதமான பிகினி உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்தவர் நடிகை அமைரா தஸ்துர் (Amyra Dastur). மிகவும் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக பணியாற்றினார். இவரது சமூக வலைதள பக்கத்தை பின்தொடரும் இளசுகளின் எண்ணிக்கை அதிகமாகும்.
28
அமைராவின் நடிப்புத்திறமை முதலில் வெளிப்பட்டது பாலிவுட்டில் தான். இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இஸாக் (Issaq) என்கிற இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
38
இதையடுத்து 2015-ம் ஆண்டு இவரை தமிழுக்கு அழைத்து வந்தார் கே.வி.ஆனந்த். அவர் இயக்கிய அனேகன் (Anegan) படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் அமைரா. இப்படத்தில் அவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
48
இந்த படத்தில் இவரது நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தாலும், தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் “அமைராவின்” (Amyra) இளமையையும் அழகையும் பாலிவுட் திரை உலகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
58
அனேகன் படத்துக்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அமைரா, தற்போது 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.
68
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள பஹீரா (Bagheera) படத்தில் 5 ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார் அமைரா. இப்படத்தில் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி உள்ளார்.
78
படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் அமைரா (Amyra), அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
88
அந்த வகையில் தற்போது மாலத்தீவுக்கு (Maldives) சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு விதவிதமான பிகினி உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.