“வில்லனா நடிச்சாலும் நீங்க கிரேட் சார்”... ஏழைகளுக்கு உதவுவதற்காக யாரும் செய்யாத காரியத்தை செய்த சோனு சூட்...!

Published : Dec 10, 2020, 09:21 AM IST

ஏழைகளுக்கு அடுத்தடுத்து உதவுவதற்காக ரியல் ஹீரோ சோனு சூட் மேற்கொண்டுள்ள காரியம் சாமானியர்கள் முறை கோடிகளில் புரளும் சூப்பர் ஸ்டார்கள் வரை வாய்பிளக்க வைத்துள்ளது. 

PREV
110
“வில்லனா நடிச்சாலும் நீங்க கிரேட் சார்”... ஏழைகளுக்கு உதவுவதற்காக யாரும் செய்யாத காரியத்தை செய்த சோனு சூட்...!

கொரோனா பொது முடக்க காலத்தில் இருந்து தற்போது வரை ஏழை, எளிய மக்களுக்கு பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தன்னால் ஆன பல்வேறு உதவிகளை ‘இல்லை’ என்று மறுக்காமல் இன்முகத்துடன் செய்து வருகிறார். 
 
210

கொரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் தவித்த ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்ல, பஸ், பிளைட் போன்றவற்றை ஏற்பாடு கொடுத்தார். அதே போல் உணவின்றி கஷ்டப்பட்டு வந்த பலருக்கு சாப்பாடு கொடுத்தும் உதவினார்.

310

விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்கு காளை மாடுகளை வாடகைக்கு எடுக்க கூட பணம் இல்லாமல் இரண்டு மகள்களை ஏரில் பூட்டி உழுத நிலையில் அடுத்த நாளே அவருக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தார். 

410

சாப்ட்வேர் இன்ஜினியர் பணியை இழந்து காய்கறி வியாபாரம் செய்த இளம்பெண்ணுக்கு அடுத்த நாளே சாப்ட்வேர் இன்ஜினியர் பணி வாங்கி கொடுத்தார். 
 
510

ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்த தமிழக மாணவர்கள் 900க்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தார். 

610

ஹரியானா மாநிலத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் மாணவி ஒருவர் மரத்தின் மீதேறி கல்வி பயிலும் வீடியோவை பார்த்த சோனு சூட், தனது சொந்த செலவில் செல்போன் டவர் கட்டிக் கொடுத்தார். 

710

தற்போது வரை சோனு சூட்டிற்கு சோசியல் மீடியா மூலமாக ஆயிரக்கணக்கான மக்கள் உதவி கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு அடுத்தடுத்து உதவிக்கரம் நீட்டி வரும் சோனு சூட்டிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

810

ஆம்... அடுத்தடுத்து உதவி கேட்போருக்கு கொடுப்பதற்காக தனது பெயரிலும், மனைவி சோனாலி பெயரிலும் உள்ள 2 கடைகள் 6 குடியிருப்புகள் என மொத்தம் 8 சொத்துக்களை 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார். 

910

அதுமட்டுமின்றி மும்பையில் செயல்படும் இன்டர்நேஷனல் வங்கி ஒன்றில் சுமார் 10 கோடிக்கு லோன் வாங்க செப்டம்பர் 15ம் தேதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, நவம்பர் 24ம் தேதி பதிவு செய்துள்ளதாகவும் நேஷனல் மீடியாக்கள் பலவற்றிலும் செய்தி பரவி வருகிறது. 

1010

சினிமாவில் முரட்டு வில்லனாக நடித்தாலும் கோடிகளை கொட்டி வைத்துக் கொண்டு கொடுக்க மனமில்லாதவர்கள் எங்கே?... அய்யோ கேட்பவருக்கு உதவ முடியவில்லையே என சொத்துக்களை அடகு வைக்கும் சோனு சூட் எங்கே? என சோசியல் மீடியாவில் பாராட்டு மழை பொழிந்து வருகிறது. 
 
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories