கொரோனாவால் சாப்ட் வேர் இன்ஜினீயர் வேலை இழந்து காய்கறி விற்ற பெண்! சோனு சூட்டின் அதிரடி உதவி!

First Published | Jul 29, 2020, 12:54 PM IST

கொரோனவால் சாப்ட் வேர் இன்ஜினீயர் வேலை இழந்து காய்கறி விற்ற பெண்! சோனு சூட்டின் அதிரடி உதவி!
 

வில்லன் நடிகராக மட்டுமே ரசிகர்கள் கண்களுக்கு தெரிந்த, நடிகர் சோனு சூட்டின் நல்ல உள்ளத்தை வெளிப்படுத்தியது என்றால் இந்த கொரோனா சமயம் தான். ஊரடங்கில் பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவித்த புலம் பெயர் தொழிலாளர்கள், அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்ல, பிரத்தேயகமாக வேன், பஸ், விமானம் போன்ற வற்றை ஏற்பாடு செய்தது மட்டும் இன்றி, அணைத்து செலவையும் ஏற்று கொண்டார்.
மேலும், கொரோனா காலத்தில் சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருந்த, பல ஏழை மக்களுக்கு உதவிகள் செய்து ரியல் ஹீரோவாகவே மாறி விட்டார்.
Tap to resize

சமீபத்தில் கொரோனவால் கடந்த முறை பயிரிட்ட தக்காளி பழங்களை உரிய விலைக்கு வியாபாரம் செய்யாததால், ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயி நாகேஸ்வர ராவ் பெரிய நஷ்டத்தை சந்தித்தார். இதனால் இந்த முறை மீண்டும் தக்காளி பயிரிட நினைத்த அவருக்கு நிலத்தை சீர் செய்து தக்காளி பழங்கள் பயிரை கூட பணம் இல்லாத நிலை உருவானது.
எனவே, தன்னுடைய இரு மகள்களையும், மாட்டுக்கு பதிலாக ஏரில் பூட்டி உழவு செய்தார். இது குறித்து மற்றவர்கள் விமர்சித்த போதும், தன்னுடைய வறுமையை எண்ணி அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டு இளம் பெண்கள், ஏர் உழுத வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது.
இதை தொடர்ந்து அந்த குடும்பத்திற்கு, தன்னால் முடிந்த உதவியாக, ஒரு டிராக்டர் வாங்கி கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார் சோனு சூட். இதற்கு பலர் அவரை மனதார பாராட்டி வந்தனர். இதை தொடர்ந்து தற்போது பெண்ணுக்கு உதவி செய்துள்ளார் சோனு சூட்.
ஐதராபாத்தை சேர்ந்த சாரதா என்ற இளம்பெண் டெல்லியில் உள்ள சாப்ட் வேர் நிறுவனமொன்றில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். அவர் வேலைக்கு சேர்ந்து சில மாதங்களே ஆகும் நிலையில், கொரொனா பிரச்சனையால், அந்த நிறுவனம் திடீர் என சிலரை பணி நீக்கம் செய்தது. இதனால் சாரதாவுக்கும் வேலை பறி போனது.
வேலை பறிபோனதால் மீண்டும் சொந்த ஊருக்கு வந்த அந்த பெண், காய்கறி விற்பனை செய்ய துவங்கினார். அதிகாலை 4 மணிக்கே மொத்த காய்கறி மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வந்து தனது ஊரில் விற்பனை செய்தார்.
இதுகுறித்து அவர் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டில், தான் செய்த சாப்ட் வேர் இன்ஜினீர் வேலை பறிபோனதால் தனக்கு எந்த கவலையும் இல்லை. காய்கறி வேலை செய்வதை சந்தோஷமாகவே செய்கிறேன். இதன் மூலம் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மீண்டும் சாப்ட் வேர் இன்ஜினீர் வேலை கிடைத்தால் செய்வேன் என்றும் தெரிவித்தார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து இந்த வீடியோவை பார்த்த நடிகர் சோனு சூட், தன்னுடைய அலுவலக பணியாளர் மூலம், சாரதாவுக்கு வேலைக்கான பணியாணையை வழங்க வைத்துள்ளார். இவரின் எதிர்பாராத இந்த உதவிக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!