எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த போதே தனது மாமா மகளான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.
வசதியான குடும்பத்து பெண்ணான ஆர்த்தி தனது கணவர் சிவகார்த்திகேயனின் அனைத்து முயற்சிகளுக்கும் பக்க பலமாக இருந்து வருகிறார்.
சின்ன வயசில் இருந்தே இருவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். சொந்த மாமாவின் மகளாகவே இருந்தாலும் ஆர்த்தி - சிவகார்த்திகேயன் இடையே காதல் எதுவும் இல்லையாம்.
அம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள சிவகார்த்திகேயன் அவர் பார்த்த பெண்ணான ஆர்த்தியை தான் திருமணம் செய்துகொண்டார்.
சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது.
சின்ன வயசில் இருந்தே ஒன்றாக வளர்ந்த சிவகார்த்திகேயன், ஆர்த்தி புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
குட்டி பசங்களாக இருக்கும் போது சிவகார்த்திகேயன், ஆர்த்தி எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், இப்போது தம்பதிகளாக இருக்கும் புகைப்படத்தையும் வைத்து எஸ்.கே. ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.