இருமுடி சுமந்து... சபரிமலை புறப்பட்ட சிம்பு... தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்...!

First Published | Dec 25, 2020, 6:34 PM IST

இருமுடி சுமந்து சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்ற சிம்புவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

சிம்புவின் கால்ஷீட் சொதப்பல்களால் வெங்கட் பிரபு இயக்கி வந்த மாநாடு திரைப்படம் கைவிடப்படுவதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். ஆனால் இந்த பிரச்சனையில் தலையிட்ட சிம்புவின் தாயார் உஷா, தனது மகன் சொன்னபடி படத்தை முடித்துக் கொடுப்பார் என உறுதியாளித்தார்.
இதையடுத்து சிம்பு தனது உடல் எடையைக் குறைக்கும் வேலையை தீவிரமாக ஆரம்பித்தார். பட வேலைகள் ஆரம்பித்த சில நாட்களியே சபரிமலைக்கு மாலை போட்ட சிம்பு, 40 நாட்கள் கடும் விரதம் இருந்து மலைக்கு சென்று திரும்பினர்.
Tap to resize

தனது செகண்ட் இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வேண்டும் என சிம்பு வேண்டுதல் வைத்து மலைக்கு சென்றதாக அப்போது கூறப்பட்டது. தற்போது இந்த ஆண்டு மீண்டும் சிம்பு மலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.
வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணியில் தொடங்க உள்ள மாநாடு படத்தின் ஷூட்டிங் தற்போது புதுச்சேரியில் நிறைவடைந்துள்ளது. விரைவில் சேலம் ஏற்காடு பகுதிகளில் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது. இந்த கேப்பில் சிம்பு ஐயப்பனை தரிசித்துவிட்டு திரும்ப முடிவெடுத்துள்ளார்.
அதேபோல் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படமும் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. அந்த படம் நல்ல படியாக ஓட வேண்டும் என்ற வேண்டுதலுடன் சிம்பு மலைக்கு செல்கிறார்.
இருமுடி சுமந்து சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்ற சிம்புவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!