“12 மணி நேரம் வலியோடு போராட்டம்”... இயற்கை முறையில் பிரசவித்த நகுல் மனைவியின் நெகிழ்ச்சியான பதிவு...!

First Published Sep 3, 2020, 12:45 PM IST

நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி இயற்கையான முறையில் குழந்தை பெற்றெடுத்தது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.

“பாய்ஸ்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல நடிகை தேவயானியின் தம்பியான நகுல். அந்த படத்தில் ஓவராக எடை போட்டு செம்ம குண்டாக இருந்தவர், அதன் பின்னர் தீவிர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் லுக்கிற்கு மாறினார்.
undefined
அதன் பின்னர் இவர் நடித்த “காதலில் விழுந்தேன்” படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டாக இளம் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”, “மாசிலாமணி”, “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தார். இடையே சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்றார்.
undefined
நடிகர் நகுல் கடந்த 2016ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
undefined
மேலும் தனது 35-வது பிறந்தநாளன்று தன் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என தன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.
undefined
இந்நிலையில் நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அகிரா என்று பெயர் வைத்துள்ளனர்.
undefined
தற்போது வாட்டர் பர்த் முறையில் குழந்தை பெற்ற அனுபவம் குறித்து ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்கு பிறகு ஸ்ருதி புகைப்படத்துடன் பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.
undefined
நான் 32 வாரங்கள் கர்ப்பமாக இருந்தபோது நானும், நகுலும் எங்கள் நான்கு பூனைகளுடன் ஹைதராபாத்துக்கு காரில் சென்றது இன்னும் நம்ப முடியவில்லை. ஏன் ஹைதராபாத்?, ஏன் தனியாக?, எப்படி நீங்கள் இருவரும் சமாபளிப்பீர்கள்? என்று பலர் எங்களை கேட்டார்கள். அதற்கு இது தான் பதில். ஸ்வாதி தான் நாங்கள் இப்படி ஒரு பெரிய முடிவு எடுக்க ஒரு காரணம். அவரின் வகுப்புகளில் கலந்து கொண்டதன் மூலம் நிறைய கற்றுக் கொண்டோம்.
undefined
ஸ்வாதியுடன் பழகிய பல ஆண்டு பழக்கம் போல் இருந்தது. கர்ப்ப காலத்திற்கு முந்தைய, பிந்தைய பல மோசமான விஷயங்கள் பற்றி கேட்டு கண்ணீர் வந்தது. நீங்கள் இல்லை என்றால் நாங்கள் சாங்டம் பர்த் சென்டருக்கு சென்றிருக்க மாட்டோம்.
undefined
என் பிரசவத்திற்கு உதவிய விஜயா மேடம் அருமையானவர். குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து பல டாக்டர்களிடம் நாங்கள் ஆலோசனை கேட்டோம். ஆனால் அவர்கள் எங்களுடன் 3 நிமிடம் கூட பேச விரும்பவில்லை. ஆனால் விஜயா மேடம் எங்களுடன் ஒரு மணி நேரம் வீடியோ காலில் பேசினார். எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுத்தார்.
undefined
அன்று இரவே முடிவு செய்தோம் நாங்கள் சாங்டம் பர்த் சென்டரில் தான் குழந்தை பெற்றுக்கொள்வது என்று. எனது 12 மணி நேர வலியை ஒரு குழந்தையை தாய் சமாதனப்படுத்துவது போல் ஆறுதல் கூறி தேற்றினார்.
undefined
ஒவ்வொரு பெண்ணும் இந்த வகையான மரியாதைக்குரிய மற்றும் நல்லவிதமான பிரசவ முறை கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கணவன்மார்களும் யாரோ சொன்னதை கேட்டு பின்பற்றாமல் ஆதாரத்துடன் கூடிய ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
undefined
click me!