தெலுங்கு திரையுலகில் பிரபலங்களிடையே இருக்கும் ஒற்றுமை மற்ற திரையுலகினர் இடையே இல்லை என்பது ஒரு விவாதமாகவே இருந்து வருகிறது. தெலுங்கில் ஏதேனும் ஒரு புதுமுக நடிகரின் படம் வந்தால், அதனை புரமோட் செய்யும் விதமாக முன்னணி நடிகர்கள் அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். இது அப்படத்திற்கு பலமாகவும் அமையும். தெலுங்கு பிரபலங்களைப் போல் தமிழ் நாட்டில் நடிகர், நடிகைகள் அப்படி செய்வதில்லை என்பது குற்றச்சாட்டாகவே இருந்து வந்தது.
அந்த வகையில், அண்மையில், நடிகர் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திற்காக பின்னணி குரல் கொடுத்திருந்தார். அப்படத்திற்கு அவரது குரல் மிகப்பெரிய பலமாகவும் அமைந்தது. மடோன் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் மீதுள்ள நட்புக்காக இப்படத்திற்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்ததாகவும், இதற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.