பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். லால், நட்டி, யோகிபாபு, கெளரி கிஷன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது முதல் படத்திலேயே வெற்றியை பதித்த மாரி செல்வராஜ் உடன் தனுஷ் கூட்டணி அமைத்தது ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்புகள் நிறைவுற்றதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில் ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.